For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளாவில் கை, பை நிறைய பணத்துடன் செழித்தோங்குவது நகைக்கடைக்காரர்களும், என்.ஆர்.ஐகளுமே!

Google Oneindia Tamil News

கொச்சி: கேரளாவின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் அந்த மாநிலத்தைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர்களும், வெளிநாடுகளில் வாழும் மலையாளிகளுமே அதிகம் உள்ளனர்.

உள்ளூரைச் சேர்ந்த பிற பிரிவு மலையாளிகள் இந்தப் பட்டியலில் குறைவாகவே உள்ளனர். ஷாங்காயைச் சேர்ந்த ஹூருன் ரிப்போர்ட் என்ற மீடியா நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் இது தெரிய வந்துள்ளது.

மிகப் பெரிய மலையாளி என்ற பெருமையை துபாயைச் சேர்ந்த எம்கே குரூப் என்ற நிறுவனத்தின் அதிபரான எம்.ஏ. யூசப்பலி என்பவர் பெறுகிறார். இவரது சொத்து மதிப்பு ரூ. 11,400 கோடியாகும்.

2வது இடத்தில் ரவி பிள்ளை

2வது இடத்தில் ரவி பிள்ளை

பஹ்ரைனைச் சேர்ந்த ஆர்பி குரூப்பின் தலைவரும், தலைமைச் செயலதிகாரியுமான ரவி பிள்ளை ரூ. 9600 கோடியுடன் 2வது இடத்தில் இருக்கிறார்.

சன்னி வர்க்கி 3வது இடத்தில்

சன்னி வர்க்கி 3வது இடத்தில்

துபாயைச் சேர்ந்த ஜெம்ஸ் எஜுகேஷன் அமைப்பின் நிறுவனர் சன்னி வர்க்கி ரூ. 9000 கோடி சொத்துக்களுடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.

18 பேரில் 6 பேர்தான் கேரளாவில்

18 பேரில் 6 பேர்தான் கேரளாவில்

பணக்கார மலையாளிகளில் முதல் 18 இடங்களில் இருப்பவர்களில் 6 பேர்தான் கேரளாவில் வசிப்பவர்கள். 5 பேர் இந்தியாவின் பிற பகுதிகளில் வசிக்கின்றனர். 7 பேர் வெளிநாடுகளில் உள்ளனர். இந்த 7 பேரில் 6 பேர் மேற்கு ஆசியாவில் வசிக்கிறார்கள்.

நகைக்கடைக்காரர்கள் கையில் ஏகப்பட்ட பணம்

நகைக்கடைக்காரர்கள் கையில் ஏகப்பட்ட பணம்

பெரும்பாலான கோடீஸ்வரர்ளில் நகைக்கடைக்காரர்கள்தான் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்யாண் ஜூவல்லர்ஸ் கல்யாணராமன்

கல்யாண் ஜூவல்லர்ஸ் கல்யாணராமன்

கல்யாண் ஜூவல்லர்ஸ் அதிபர் டி.எஸ். கல்யாண ராமனின் சொத்து மதிப்பு ரூ. 7100 கோடியாகும்.

இன்போசிஸ் கோபாலகிருஷ்ணன்

இன்போசிஸ் கோபாலகிருஷ்ணன்

இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும், செயல் துணைத் தலைவருமான கோபாலகிருஷ்ணனின் சொத்து மதிப்பு ரூ. 8800 கோடியாகும்.

குறுகிய காலத்தில் சொத்து குவித்த முத்தூட்

குறுகிய காலத்தில் சொத்து குவித்த முத்தூட்

தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் வகை தொகை இல்லாமல் கடை திறந்து வைத்துள்ள முத்தூட் மற்றும் அவர்களது குடும்ப நிறுவனத்தினர்தான் மிகக் குறுகிய காலத்தில் மிகப் பெரிய அளவில் சொத்து சேர்த்தவர்களாம். இவர்கள் முத்தூட் பைனான்ஸ் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.

குறுகிய காலத்தில் சொத்து குவித்த முத்தூட்

குறுகிய காலத்தில் சொத்து குவித்த முத்தூட்

தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் வகை தொகை இல்லாமல் கடை திறந்து வைத்துள்ள முத்தூட் மற்றும் அவர்களது குடும்ப நிறுவனத்தினர்தான் மிகக் குறுகிய காலத்தில் மிகப் பெரிய அளவில் சொத்து சேர்த்தவர்களாம். இவர்கள் முத்தூட் பைனான்ஸ் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.

ஜோயாலுக்காஸ்

ஜோயாலுக்காஸ்

தமிழகத்தின் பல நகரங்களிலும் கடை பரப்பியுள்ள ஜோயாலுக்காஸ் நிறுவனத்தின் ஜாய் ஆலுக்காஸின் சொத்து மதிப்பு ரூ. 6300 கோடியாகும்.

பீமா ஜூவல்லர்ஸ்

பீமா ஜூவல்லர்ஸ்

அதேபோல தமிழகத்தில் பல பகுதிகளில் கடை போட்டுள்ள பீமா ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் பி. கோவிந்தனின் சொத்து மதிப்பு ரூ. 4200 கோடியாகும்.

English summary
According to the Kerala Rich List published by Hurun Report, a media group based out of Shanghai, MA Yousuffali, chairman of Abu Dhabi-headquartered Emke Group, is the richest Malayali with a net worth of Rs 11,400 crore. Ravi Pillai, chairman and CEO of Bahrain-based RP Group, came second with Rs 9,600 crore worth of assets. Third in the list is Sunny Varkey, founder and executive chairman of Dubai-centered Gems Education, whose net worth is valued at Rs 9,000 crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X