For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாவோயிஸ்டுகளின் 'மாவீரர் வாரம்': ஒடிஷாவில் பேருந்து, ரயில் போக்குவரத்து பாதிப்பு- பலத்த பாதுகாப்பு!!

By Mathi
Google Oneindia Tamil News

Odisha on high alert as Martyrs’ Week of Maoists begins
கோரபுட்: மாவோயிஸ்டுகள் இயக்கத்தினர் மாவீரர் வாரத்தை கடைபிடித்து வருவதால் ஒடிஷாவின் கோரபுட் மாவட்டத்தில் பேருந்து, ரயில் போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வன்முறை சம்பவங்கள் நிகழாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாவோயிஸ்டுகள் ஆண்டு தோறும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3-ந் தேதி வரை மாவீரர் வாரத்தை கடைபிடித்து வருகின்றனர். இந்த மாவீரர் வாரத்தின் போது நடைபெறும் நிகழ்வுகளில் ஆந்திரா, சத்தீஸ்கர் மாநில மாவோயிஸ்டுகளும் பங்கேற்பது வழக்கம்.

இதனைத் தொடர்ந்து ஒடிஷா மாநில அரசுப் போக்குவரத்து கழகம், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளுக்கான பேருந்து போக்குவரத்தை முழுமையாக ரத்து செய்துள்ளது. இதேபோல் கோரபுட் மாவட்டத்துக்கான ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் ஆகஸ்ட் 3-ந் தேதி வரை அரசு அதிகாரிகள் எந்த ஒரு இடத்துக்கும் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

மாவோயிஸ்டுகளின் தாக்குதல் முயற்சிகளை முறியடிக்கும் வகையில் பி.எஸ்.எப். கோப்ரா உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் பல இடங்களில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

English summary
The border districts of Odisha have been asked to remain on high alert and take all possible measures to foil attempts by Maoists to create violence during their Martyrs’ Week which began today, a senior official of the Odisha police said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X