For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பத்மநாபசுவாமி கோயில் நிர்வாக குறைபாடு கவலையளிக்கிறது: உச்ச நீதி்மன்றம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Ornements at Padmanabha swamy temple not reported, supreme court told
டெல்லி: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலின் நிர்வாக குறைபாடுகள் கவலையளிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரத்தில் 16ம் நூற்றாண்டை சேர்ந்த பத்மநாபசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் நில அறைகளில் பொக்கிஷங்கள் இருப்பதாக வெளியான தகவல்களை தொடர்ந்து நடைபெற்ற சோதனைகளில் ரூ.1 லட்சம் கோடி மதிப்புக்கு தங்க, வைர நகைகள் இருப்பது தெரியவந்தது. இன்னும் ஒரு நிலவறை திறக்கப்படாமல் உள்ளது.

இதனிடையே இதுதொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில், கோபால் சுப்பிரமணியம் தலைமையிலான சட்ட வல்லுநர் குழு தாக்கல் செய்திருந்த அறிக்கையில், 17 கிலோ தங்க நகைகள் மண்ணுக்குள் வைத்து கடத்தி செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
கோயில் நிர்வாகத்தில் கோர்ட் தலையிட்டு வெளிப்படையான நிர்வாகம் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்மீது இன்று நடந்த விசாரணையின்போது, கோபால் சுப்பிரமணியம் தனது வாதத்தை முன்வைத்தார். அவர் கூறுகையில்,

கோயில் நிர்வாகத்தில் மிகுந்த மெத்தனப்போக்கு காணப்படுகிறது. கோயிலுக்கு நன்கொடையாக வந்த தங்க, வைர நகைகள் குறித்து முறையாக கணக்கு பராமரிக்கப்படவில்லை. பக்தர்களுக்கு அளிக்கும் பிரசாதம் கோயிலுக்குள் தயாரிக்கப்படாமல் வெளியில் தயாரிக்கப்பட்டது என்றார்.

இதன்மீது கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம் பத்மநாபசுவாமி கோயிலின் நிர்வாக குறைபாடுகள் கவலையளிப்பதாக தெரிவித்தது. அதே நேரம் மன்னர் குடும்பத்துக்காக வாதாடிய வக்கீல்கள் சட்ட வல்லுநர் குழு தாக்கல் செய்த அறிக்கையில் குறைகள் இருப்பதாக சுட்டிக்காண்பித்தனர். இவ்வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

English summary
Huge amounts of gold and silver donated by devotees at the famous temple Sree Padmanabhaswamy temple in Kerala have not been reported by the trustees, a report to the apex court says.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X