For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆபாசம் படம் காட்டியது, அசிங்கமாகப் பேசியது: டெல்லி போலீஸ் மீது 62 பாலியல் அத்துமீறல் வழக்குகள்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: துணை கமிஷனர் உள்ளிட்ட டெல்லி போலீஸார் மீது பெண்களுக்கு ஆபாச படம் காட்டியது முதல் அசிங்கமாகப் பேசியது வரை என மொத்தம் 62 பாலியல் அத்துமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

டெல்லி போலீசார் மீது உள்ள பாலியல் அத்துமீறல் புகார்கள் மற்றும் வழக்குகள் குறித்து தகவல் அளிக்குமாறு தகவல் அறியும் சட்டம் மூலம் விண்ணப்பிக்கப்பட்டது.

அதற்கு டெல்லி போலீசார் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது,

62 வழக்குகள்

62 வழக்குகள்

2003ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை டெல்லி போலீசார் மீது 62 பாலியல் அத்துமீறல் வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால் 2003ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரையிலான தகவல் கிடைக்கவில்லை.

துணை கமிஷனர்

துணை கமிஷனர்

2009ம் ஆண்டில் டெல்லி ஆயுத படையின் முதல் பட்டாலியனின் துணை கமிஷனர் மீது பாலியல் அத்துமீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் 2013ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பணியில் இருந்து வலுக்கட்டாயமாக ஓய்வு பெற வைக்கப்பட்டுள்ளார்.

பெண் கான்ஸ்டபிள்

பெண் கான்ஸ்டபிள்

போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்த பெண் கான்ஸ்டபிள் ஒருவர் தன்னுடன் வேலை பார்க்கும் ஒருவர் தனக்கு தினமும் ஆபாச படம் காட்டுவதுடன், அசிங்கமாக பேசுவதாக கடந்த ஆண்டு புகார் கொடுத்தார். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

புகார்கள்

புகார்கள்

பெண் போலீசாரிடம் ஆண் போலீசார் அத்துமீறி நடப்பதுடன் பாலியல் தொல்லை கொடுப்பதாக கடந்த ஆண்டு போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து 3 புகார்கள் வந்துள்ளன.

டெல்லி

டெல்லி

டெல்லியின் மேற்கு மாவட்டத்தில் போலீசாருக்கு எதிராக 13 பாலியல் அத்துமீறல் வழக்குகளும், வடமேற்கு மாவட்டத்தில் 16 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. டெல்லி போலீசாரின் எண்ணிக்கை 80 ஆயிரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
From showing porn film to use of filthy language were among the 62 sexual harassment charges levelled against Delhi Police personnel including an Assistant Commissioner of Police who was "compulsorily retired".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X