For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதாவை பார்க்க முடியாமல் சென்னை திரும்பிய முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் குழு!

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: ஜாமீன் கிடைக்காத விரக்தியிலுள்ள ஜெயலலிதா, முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்களைசந்திக்காததால் அவர்கள் பெங்களூரில் இருந்து சென்னை கிளம்பினர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில்,தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார் ஓ. பன்னீர் செல்வம். அமைச்சரவையில் மொத்தம் 30பேர்பதவியேற்றுள்ளனர்.

Panneerselvam to meet Jayalalitha

பதவியேற்புக்கு பிறகு தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனைநடத்திய பன்னீர்செல்வம், நேற்று மாலை 6.30 மணிக்கு சென்னையில் இருந்து சிறப்புவிமானத்தில் பெங்களூர் புறப்பட்டார். அவருடன் அமைச்சர்கள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி,நத்தம் விஸ்வநாதன், விஜயபாஸ்கர் வைத்தியலிங்கம் ஆகியோரும் புறப்பட்டனர்.

பெங்களூர் வந்தடைந்த அவர்கள் ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர். இன்று காலை அவர்கள் ஜெயலலிதாவைசந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஹைகோர்ட்டில் ஜெயலலிதா மீதான ஜாமீன் மனுவிசாரணைக்கு வந்ததால், ஜெயலலிதா ஜாமீனில் விடுதலையாகி விடுவார். விடுதலைசெய்தியுடன் அவரை சந்திக்கலாம் என காத்திருந்தனர்.

ஆனால், ஜாமீன் விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்திப்போடப்பட்டதால் ஜெயலலிதாவை சந்திக்கதயங்கி ஹோட்டலிலேயே பன்னீர்செல்வம் உள்ளிட்ட பிரமுகர்கள் இருந்தனர். இந்நிலையில் நாளைமீண்டும் ஜெயலலிதா மீதான ஜாமீன் மனு சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வருவதால்பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீண்டும் குஷியடைந்தனர்.

இதையடுத்து, சிறைக்கு சென்று ஜெயலலிதாவை பார்க்க திட்டமிட்டனர். ஆனால் இன்று மாலை வரைஅவர்களை சந்திக்க ஜெயலலிதா அனுமதி தரவில்லை. எனவே பன்னீர்செல்வம் குழு, ஜெயலலிதாவைசந்திக்காமல் சென்னை திரும்பியது. ஜெயலலிதா, பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களை சந்திக்கமறுத்தது குறித்து பலவேறு காரணங்கள் உலா வருகின்றன. டிவிட்டரிலும் காரணங்கள் வலம்வருகின்றன.

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, பன்னீர்செல்வம் உள்ளிட்டோர்,ஜெயலலிதாவை பார்க்க அனுமதி கொடுத்தோம். ஆனால் ஜெயலலிதா தரப்பில் இருந்துதான்பன்னீர்செல்வத்தை பார்க்க சம்மதிக்கவில்லை. பார்வையாளர்களை சந்திக்க சிறிது தூரம் நடந்து வரவேண்டும் என்பதால், ஜெயலலிதா தவிர்த்துவிட்டதாக தெரிகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

English summary
Chief minister of Tamilnadu Panneerselvam has reached Bangalore on monday night. He is expected to meet Jayalalithaa on tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X