For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லியில் பொது இடத்தில் துப்பினால், உச்சா போனால், குப்பை போட்டால் 'ஃபைன்'

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: பொது இடங்களில் குப்பை போடுபவர்களுக்கு ரூ.100 முதல் 500 வரை அபராதம் விதிக்க வடக்கு டெல்லி மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

தலைநகரான டெல்லியை சுத்தமாக வைத்துக் கொள்ளும் பொருட்டு ஊரை சுத்தமாக வைப்பதை வலியுறுத்தும் 100 நாட்கள் நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பொது இடங்களில் குப்பை போடுபவர்களுக்கு ரூ.100 முதல் 500 அபராதம் விதிக்கப்பட உள்ளது.

இது தவிர வேறு சில செயல்களுக்கும் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

மாநகராட்சி

மாநகராட்சி

தெருக்கள் மற்றும் பொது இடங்களில் ஆட்கள் நிறுத்தி வைக்கப்படுவார்கள். யாராவது குப்பை போட்டால் அவர்களை பிடித்து உடனடியாக அபராதம் விதிப்பார்கள். அந்த அபராத தொகை மாநகராட்சியிடம் வழங்கப்படும் என்று வடக்கு டெல்லி மேயர் யோகேந்தர் சந்தோலியா தெரிவித்துள்ளார்.

சிறுநீர்

சிறுநீர்

மக்கள் பொது இடங்களில் குப்பை போட்டால் மட்டும் அல்ல சிறுநீர் கழித்தாலோ, எச்சில் துப்பினாலோ அபராதம் விதிக்கப்படும் என்று சந்தோலியா தெரிவித்துள்ளார்.

செல்லப் பிராணிகள்

செல்லப் பிராணிகள்

செல்லப் பிராணிகள் பொது இடங்களில் மல, ஜலம் கழித்தால் அதன் உரிமையாளர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கபடுகிறது.

மருத்துவமனைகள்

மருத்துவமனைகள்

மக்கிப் போகும் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தாத மருத்துவமனைகளுக்கு கடும் அபராதம் விதிக்கும் வகையில் மாநகராட்சி சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்று தெற்கு டெல்லி மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் தெரவித்தார்.

தெருக்கள்

தெருக்கள்

டெல்லியில் குப்பை ஒரு பெரிய பிரச்சனையாகிவிட்டது. சேகரிப்படும் குப்பைகளில் 85 சதவீதம் தெருக்களில் இருந்து தான் எடுக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The north Delhi municipal corporation has decided to impose fine on citizens who throw trash on the streets, urinate and spit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X