For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவி கட்சிக்கு எச்சரிக்கை மணிதான் இடைத்தேர்தல் முடிவுகள்: ஷகீல் அகமது!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 10 மாநில இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக அமையாத நிலையில், பிரித்தாளும் அரசியலை மக்கள் புறக்கணித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

சட்டசபை மற்றும் லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது கூறியதாவது:

தேர்தல் முடிவுகள் காவி கட்சிக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது. மக்கள் அக்கட்சியை புறக்கணித்துள்ளனர். அதற்குக் காரணம் அவர்களது பிரித்தாளும் அரசியல்.

100 நாளிலேயே எதிர்ப்பு

100 நாளிலேயே எதிர்ப்பு

மோடி அரசு அமைந்த 100 நாட்களிலேயே அக்கட்சி எதிர்ப்பு அலைகளை சந்தித்திருக்கிறது. மக்களுக்கு பாஜகவின் ஆட்சியும், மோடியின் அரசியலும் பிடிக்கவில்லை.

சர்ச்சை அமைச்சர்கள்

சர்ச்சை அமைச்சர்கள்

பிரதமர் மோடி அமைதியாக இருந்தால்கூட அவரது அமைச்சர்கள் சிலரும், கட்சியின் தலைவர்கள் சிலரும் அறிக்கைகள் வாயிலாக பிரிவினை அரசியலை செய்து வருகின்றனர்.

எழுச்சி கண்ட காங்கிரஸ்

எழுச்சி கண்ட காங்கிரஸ்

லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில், தற்போது இந்த இரண்டு மாநிலங்களிலுமே காங்கிரஸ் எழுச்சி கண்டுள்ளது.

வரலாற்றில் முதல் முறை

வரலாற்றில் முதல் முறை

ஓர் அரசு அமைந்து 100 நாட்களுக்குள்ளதாகவே மக்களின் எதிர்ப்பு அலைகளை சம்பாதித்துள்ளது இதுவே முதல் முறையாகும்.

இவ்வாறு ஷகீல் அகமது கூறினார்.

English summary
As BJP suffered reverses in the assembly bypolls, Congress today said the results should ring alarm bells for the saffron party as people have rejected its "politics of polarisation" and claimed anti-incumbency factor has set in within 100 days of Modi government coming to power.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X