For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்கிறது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயர்ந்துள்ளதை அடுத்து பெட்ரோல் விலை ரூ.1 உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. டீசல் விலை வழக்கம் போல 50 பைசா உயரும்.

கச்சா எண்ணை விலை, ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 16-ந்தேதிகளில் பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றி அமைக்கப்படுகிறது.

4 மாநில தேர்தல் காரணமாக கடந்த ஒரு மாதமாக எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றத்தையும் செய்ய முடியவில்லை.

Petrol prices could be hiked by Rs. 1 a litre

கடந்த மாதம் 16-ந்தேதி கச்சா எண்ணை மற்றும் ரூபாய் மதிப்பில் பெரிய அளவில் எந்த மாற்றம் செய்யப்படவில்லை. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலையில் ஏற்றம் காணப்படுகிறது. ஒரு பேரல் கச்சா எண்ணை 108.5 டாலரில் இருந்து தற்போது 110 டாலராக அதிகரித்து விட்டது.

இதனால் இந்தியாவில் பெட்ரோல் விலையை சற்று உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. எனவே பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் உயரும் என்று கூறப்படுகிறது.

இது பற்றி பெட்ரோலிய அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், டீசல் விலை வழக்கம் போல 50 காசு உயர்த்தப்படும் என்றார். வரும் வாரத்தில் பண மதிப்பு சீராக இருக்கும் பட்சத்தில் பெட்ரோல் விலையை குறைக்க முடியும் என்றும் அவர் கூறினார். இதுபற்றி வரும் ஞாயிற்றுக்கிழமைக்குப் பின்னர்தாதான் தெரிய வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

English summary
Petrol prices could be hiked by close to Rs. 1 a litre by the end of this week as the uptrend in global oil prices continues despite hopes of crude oil prices stabilising in the aftermath of the landmark deal between the West and Iran over the latter's nuclear programme.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X