For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'10 வருஷத்துல ஆயிரம் முறைக்கு மேல உரையாற்றிருக்கிறார் மன்மோகன்சிங்'

By Mathi
|

டெல்லி: பிரதமர் மன்மோகன்சிங் கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரம் முறைக்கு மேல் உரையாற்றியிருக்கிறார் என்று அவரது தகவல் தொடர்பு ஊடக ஆலோசகர் பங்கஜ் பச்சோரி விளக்கம் அளித்துள்ளார்.

பிரதமர் மன்மோகன்சிங் அதிகம் பேசாதவர் என்பது பொதுவான குற்றச்சாட்டு. லோக்சபா தேர்தல் பிரசாரத்திலோ பிரதமர் பேசவே மாட்டார் என்று பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வெளுத்து வாங்கி வருகிறார்.

PM not silent, made more than 1000 speeches in last 10 years, says his adviser

இதற்கு பதிலளிக்கும் வகையில் டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கின் ஊடக ஆலோசகர் பங்கஜ் பச்சோரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 10 ஆண்டுகளில் 1000க்கும் மேற்பட்ட முறை பிரதமர் மன்மோகன்சிங் உரையாற்றியிருக்கிறார். அவரது பேச்சை பொதுமக்களிடம் ஊடகங்கள் கொண்டு சேர்க்கவில்லை.

பிரதமரின் பேச்சை தொலைக்காட்சிகளை விட நாளிதழ்கள் அதிகம் பதிவு செய்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன்சிங் அதிகம் பேசுவதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை.

தற்போதைய லோக்சபா தேர்தலில் 4 பொதுக்கூட்டங்களில் மன்மோகன்சிங் கலந்து கொண்டிருக்கிறார். பிரதமரின் தேர்தல் பிரசாரத்தை காங்கிரஸ் கட்சிதான் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு பங்கஜ் பச்சோரி கூறினார்.

English summary
Prime Minister Manmohan Singh has made more than 1000 speeches in last 10 years, Pankaj Pachauri, communications adviser to the PM, said on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X