For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”அரசாங்க சம்பளம் வாங்கிகிட்டு, அரசியல் கட்சிகளுக்கு ’ஃபேஸ்புக்’ பிரச்சாரம்” - 4 போலீஸ் சஸ்பெண்ட்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் பேஸ்புக் மூலம் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் வேட்பாளர்களுக்கு ஓட்டு போடுமாறு பிரசாரம் செய்த 4 போலீசார் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

கேரளாவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக இணையதளங்கள் மூலம் போலீசார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது என்று டிஜிபி பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், அதையும் மீறி சில போலீசார் பேஸ்புக் மூலம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்த தனிப்பிரிவு போலீசுக்கு டிஜிபி உத்தரவிட்டார். இதில் போலீசார் 4 பேர் பிரசாரத்தில் ஈடுபட்டது உறுதியானது.

இது குறித்து டிஜிபி பாலசுப்பிரமணியத்திடம் தனிப்பிரிவு எஸ்பி அறிக்கை தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில், 4 போலீசாரையும் வட மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் டிஜிபி உத்தரவிட்டார்.

English summary
Police people 4 members involved in Face book campaign for political parties. They suspended by the DGP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X