For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

6வது கட்ட தேர்தல்: ம.பி. -63%, பீகார்- 60%, ஜார்க்கண்ட் 63%- மகாராஷ்டிராவில் 47% வாக்குப் பதிவு!!

By Mathi
|

டெல்லி: 6வது கட்ட லோக்சபா தேர்தலில் மத்திய பிரதேசத்தில் 63%, பீகாரில் 60%, ஜார்க்கண்ட்டில் 63% , உத்தரப்பிரதேசத்தில் 58% வாக்குகள் பதிவாகி இருந்தன. ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் 47% அளவுக்கே வாக்குகள் மோசமாக பதிவாகி இருந்தது.

ஜார்க்கண்ட்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று 4 லோக்சபா தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மாவோயிஸ்ட் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் மாலை 4 மணி வரை மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்றது. இங்கு 63% வாக்குகள் பதிவாகின.

Polling begins in Jharkhand, Assam, Rajasthan, MP

ராஜஸ்தானில்..

ராஜஸ்தானில் இன்று 5 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இம்மாநிலத்தில் 2வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு இது. மொத்தம் 81 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

மொத்தம் 9ஆயிரத்து 113 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. முதல் கட்ட தேர்தலில் 20 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இன்றைய தேர்தலில் ராஜஸ்தானில் 58%க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.

பீகாரில் ..

பீகார் மாநிலத்தில் இன்று 7 தொகுதிகளுக்கும் 2 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இன்று நடைபெறுவது 3 வது கட்ட தேர்தல் ஆகும்.

முதல் 2 கட்டங்களில் 13 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பீகாரில் மாலைவரை 60% வாக்குகள் பதிவாகின.

ம.பி.யில்..

மத்திய பிரதேச மாநிலத்தில் 10 தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இங்கு 1 சட்டசபை தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெற்றது.

இம்மாநிலத்தில் இது 3வது மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு ஆகும். ஏற்கெனவே 19 தொகுதிகளில் 2 கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இன்று சுமார் 63% வாக்குகள் பதிவாகின.

மகராஷ்டிராவில்..

மகாராஷ்டிராவில் மொத்தம் 19 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. இம்மாநிலத்தில் இது மூன்றாவது மற்றும் இறுதி கட்ட தேர்தலாகும்.

மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் மகாராஷ்டிராவில் மோசமான வாக்குப் பதிவாகும். மாலை 5 மணிவரை 47% வாக்குகளைத்தான் தொட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Polling began on Thursday morning in last phase of the elections in Jharkhand, Assam, Rajasthan and MP states.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X