For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரணாப் முகர்ஜி ஏன் ஜனாதிபதியாக ஒப்புக் கொண்டார் என்பது இப்போ புரியுது...

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு நடுவே குடியரசு தலைவர் மாளிகையில் அமிதாப்பச்சன் நடித்த திரைப்படத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பார்த்து ரசித்தார்.

நாடு முழுவதும் தேர்தல் பிரசாரங்களும், வாக்குப்பதிவுகளும் சுறுசுறுப்பாக நடந்துவருகின்றன. இந்த சூழ்நிலையில், அமிதாப் பச்சன் நடித்து கடந்த 11ம் தேதி வெளியான 'பூத்நாத் ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தை ஜனாதிபதி மாளிகையிலுள்ள குட்டி திரையரங்கில் நேற்று இரவு கண்டு ரசித்துள்ளார் பிரணாப் முகர்ஜி.

President Pranab watches Bhootnath returns with Amitabh

அப்போது, அமிதாப் பச்சன் உள்ளிட்ட சில முக்கிய பிரமுகர்கள் மட்டும் அவருடன் இருந்துள்ளனர். இத்தகவலை இன்று நிருபர்களிம் அமிதாப் தெரிவித்தார்.

"ஜனாதிபதி மாளிகையில் திரையிட குடியரசு தலைவர் அனுமதி கொடுப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவரது பரபரப்பான அலுவல்களுக்கு நடுவேயும், நேரம் ஒதுக்கி திரைப்படம் பார்த்தது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த திரைப்படம் தற்போதைய சமகால அரசியல் அவலங்களை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. அதோடு, வாக்களிப்பதன் முக்கியத்துவத்தையும் அந்த படத்தில் தெரிவித்துள்ளோம்" என்று அமிதாப் பச்சன் தெரிவித்தார்.

தேர்தல்.. பிரச்சாரம்.. வெற்றி-தோல்வி திகில் என அரசியல் கட்சித் தலைவர்கள் வேகாத வெயிலில் ஓடிக் கொண்டிருக்க பிரணாப் முகர்ஜி ஏன் ஜனாதிபதியாக ஒப்புக் கொண்டார் என்பது இப்போ புரியுது...

English summary
President Pranab Mukherjee spent a relaxed evening with Amitabh Bachchan watching his latest movie 'Bhootnath Returns' at Rashtrapati Bhavan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X