For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்த மோடி... விசனப்படும் அமெரிக்கா!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை மத்திய அரசு ரத்து செய்தது குறித்து அமெரிக்கா நாளிதழான நியூயார்க் டைம்ஸ் விசனத்தை வெளிப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவுச் செயலருடன் இந்திய வெளியுறவுச் செயலர் இஸ்லாமாபாத்தில் ஆகஸ்ட் 25-ல் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எல்லையிலோ பாகிஸ்தான் ராணுவம் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வந்தது.

Prime Minister Modi Fumbles on Pakistan

அத்துடன் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர், காஷ்மீர் பிரிவினைவாத இயக்கங்களை சந்திக்கவும் அழைப்பு விடுத்தார். இதனால் அதிருப்தி அடைந்த மத்திய அரசு பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அறிவித்தது.

இது குறித்து அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளேடு எழுதியுள்ள விமர்சன கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:

  • பேச்சுவார்த்தையை ரத்து செய்திருப்பதன் மூலம் பாகிஸ்தான் பிரச்சனையில் மோடி தடுமாற்றமான ஒருநிலையை மேற்கொள்கிறார்.
  • தென்னாசியாவில் அணு ஆயுத அண்டைநாடுகள் இரண்டும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும்.
  • தமது பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமரையும் அழைத்ததன் மூலம் நிறைய எதிர்பார்ப்புகளை மோடி உருவாக்கி இருந்தார்.
  • இருநாட்டு தலைவர்களும் கை குலுக்கிக் கொண்ட புகைப்படம் புதிய அடையாளமாக தென்பட்டது.
  • ஆனால் தற்போது வெளியுறவுச் செயலாளர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டிருப்பது தடுமாற்றத்தை வெளிப்படுத்துகிறது.
  • காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத் தலைவர்களை பாகிஸ்தான் தூதர் சந்தித்து பேசியது இந்தியாவின் கோபத்துக்கு ஒரு காரணம்.
  • -அதேபோல் மோடி பதவியேற்ற பின்னர் அதிகரித்து இருக்கும் யுத்த நிறுத்த ஒப்பந்தங்களும் ஒரு காரணம்.
  • காஷ்மீரில் 30 முறை பாகிஸ்தான் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறியிருப்பதாக இந்தியா சொல்கிறது.
  • அதே நேரத்தில் 57 முறை இந்தியா யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இருக்கிறது என்கிறது பாகிஸ்தான்.
  • கார்கில் போர்முனையில் அண்மையில் பேசிய மோடி, மரபுவழி யுத்தத்தை நடத்தும் சக்தியை இழந்துவிட்டதால் பயங்கரவாதம் என்ற நிழல் யுத்தத்தை நடத்துகிறது பாகிஸ்தான் என்றார்.
  • கடந்த சில ஆண்டுகாலமாக காஷ்மீர் பிரிவினைவாத இயக்க தலைவர்களுடன் பாகிஸ்தான் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.
  • நியூயார்க்கில் அடுத்த மாதம் ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேச ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
English summary
India's prime minister, Narendra Modi, fumbled an early test of leadership this week when he canceled a high-level meeting with Pakistan. There are no two countries in the world that need to talk, and talk regularly, more than these nuclear-armed South Asian neighbors whose tensions must be carefully managed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X