For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் முதல் செய்தி...!

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் 15வது பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தனது முதல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

இந்த செய்தி, பிரதமர் மோடிக்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இணையதளத்தின் தொடக்கமாகவும் இந்த செய்தி அமைந்துள்ளது.

Prime Minister Narendra Modi's Message to India

மோடி மக்களுக்கு விடுத்துள்ள செய்தி:

எனது சக இந்திய மக்களுக்கும், உலகக் குடிமக்களுக்கும் எனது வணக்கம்.

பிரதமரின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

2014, மே மாதம் 16ம் தேதி இந்திய மக்கள் மிகப் பெரிய தீர்ப்பை அளித்தனர். வளர்ச்சிக்காகவும், நல்லாட்சிக்காகவும், ஸ்திரத்தன்மைக்கும் அவர்கள் வாக்களித்னர். இந்தியாவை வளர்ச்சிப் பாதையிலும், புதிய உயரத்திற்கும் எடுத்துச் செல்ல உங்களுடைய ஆதரவும், ஆசிர்வாதமும், உள்ளார்ந்த பங்களிப்பும் முக்கியம், அவசியம்.

நாம் அனைவரும் இணைந்து வளமை வாய்ந்த எதிர்கால இந்தியாவை கட்டியமைப்போம். அனைவரும் சேர்ந்து வலுவான, வளர்ச்சி அடைந்த, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்க கனவு காண்போம். உலக சமுதாயத்துடன் இணைந்து உலக அமைதிக்காகவும், வளர்ச்சிக்காகவும் உழைக்கும் சமுதாயமாக மாற்றியமைப்போம்.

மக்களுக்கும், எனக்கும் இடையிலான நேரடியான தகவல் தொடர்பு மீடியமாக இந்த இணையதளத்தை நான் சமர்ப்பிக்கிறேன். தொழில்நுட்பத்தின் சக்தி மீதும், சமூக மீடியாக்கள் மீதும் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன். உலகம் முழுவதும் உள்ள மக்களை ஒருங்கிணைக்கும் சக்தி இதுதான். இந்த மேடை மூலம் மக்களின் கருத்துக்களை அறிந்து, தெளிந்து செயல்பட உதவியாக இருக்கும்.

இந்த இணையதளத்தின் மூலம் எனது பேச்சுக்கள், திட்டங்கள், வெளிநாட்டு பயணங்கள் மற்றும் பிற தகவல்களை மக்கள் நேரடியாக காண முடியும். இதில் எனது திட்டங்களை தொடர்ந்து நான் தெரிவித்த வண்ணம் இருப்பேன் .

இப்படிக்கு
நரேந்திர மோடி.

English summary
Narendra Modi was sworn in as India's 15th Prime Minister on Monday. Following is his message to the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X