For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீனா அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் 2வது நாளாக திபெத்தியர்கள் போராட்டம்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: சீனா அதிபர் ஜின்பிங்கின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் 2வது நாளாக போராட்டம் நடத்திய திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணமாக வருகை புரிந்துள்ள சீன அதிபருக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் சீனா தூதரகம் முன்பாக திபெத்தியர்கள் நேற்று போரட்டம் நடத்தினர்.

Pro-Tibet activists continue protest against Jinping's visit to India

இந்த நிலையில் இன்று டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் ஜின்பிங் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஹைதராபாத் இல்லத்துக்கு வெளியே மீண்டும் திபெத்தியர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தின் போது போலீசாருக்கும் திபெத்தியர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் செய்தியாளர்களும் சிக்கிக் கொண்டனர்.

பின்னர் போராட்டம் நடத்திய 8 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

English summary
Pro-Tibet activists continue their protests over the Chinese President Xi Jinping's visit on Thursday. Ten Tibetan activists were detained on Wednesday outside the Chinese Embassy for holding protests.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X