For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2ஜி விசாரணை அறிக்கையை கிழித்துப் போட வேண்டும் ராகுல் - பாஜக

Google Oneindia Tamil News

Rahul Gandhi
டெல்லி: 2ஜி ஊழல் தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் விசாரணை அறிக்கையையும் ராகுல் காந்தி கிழித்துப் போட வேண்டும் என்று என்று பாஜக நக்கலடித்துள்ளது.

இதுகுறித்து பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறுகையில், 2ஜி விவகாரம் தொடர்பான பி.சி.சாக்கோ தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் விசாராணை காங்கிரஸ் தலைமையிலான அரசு நடத்திய மிகப் பெரிய நாடகம்.

இது முற்றிலும் உண்மைகளற்ற, அரைகுறையான உண்மைகளுடன் கூடிய, முரண்பாடான அறிக்கையாக உள்ளது. இதை அடுத்து நாடாளுமன்ற் கூட்டத்தின்போது ராகுல் காந்தி கிழித்து குப்பையில் போடுவார் என்று நம்புகிறோம். அவர் அதைச் செய்ய வேண்டும். அவர் இதைச் செய்தால் நல்லது.

இந்த அறிக்கையை நிராகரிக்கிறது பாஜ. இதுதொடர்பாக 36 பக்கங்களைக் கொண்ட கடிதக் குறிப்பை கூட்டுக் குழுத் தலைவரிடம் கொடுத்துள்ளோம்.

பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் சம்மன் அனுப்ப முடியாது என்று கூட்டுக் குழு மறுத்ததே அதன் பாரபட்சமான போக்கைக் காட்டி விட்டது.

எங்களது ஆட்சேபனைக் கடிதத்தை கூட்டுக் குழு தலைவர் திருத்தவோ அல்லது வரிகளை நீக்கவோ முயற்சிக்கலாம் என்று நாங்கள் அஞ்சுகிறோம். இந்தக் கவலையை லோக்சபா சபாநாயகரிடமும் நாங்கள் தெரிவித்துள்ளோம் என்றார் அவர்.

English summary
The BJP today rejected a parliamentary panel's draft report on the 2G spectrum scam alleging a "cover-up" by the Congress-led government and taunted Rahul Gandhi saying he should "tear it up in the next session." "The report is a bundle of contradictions, untruths and half-truths," said Yashwant Sinha, one of the six BJP members in the Joint Parliamentary Committee or JPC that investigated the 2G scam. "It would be better if the Congress vice president (Rahul Gandhi) reads the report and tears it up."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X