For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிராமணராக இல்லாவிட்டால் சாப்பாடு கிடையாது உடுப்பி கோயிலில் பாரபட்சம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

உடுப்பி: "நீ பிராமணர் இல்லையா, இங்கே உட்கார்ந்து சாப்பிட முடியாது" என்று கூறி கல்லூரி உதவி பேராசிரியர் ஒருவர் உணவருந்தும் இடத்தில் இருந்து விரட்டி விடப்பட்ட சம்பவம் உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் நடந்துள்ளது. ஆலய நிர்வாகிகளுக்கு எதிராக அரசிடம் புகார் அளித்துள்ளனர் சமூக ஆர்வலர்கள்.

800 ஆண்டுகள் பழமையான உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் கோயில் அதன் நிர்வாகிகளின் பாரபட்சமான நிர்வாகத்தால் அவ்வப்போது செய்திகளில் அடிபடுகிறது. கோயில் என்பது அனைத்து மக்களுக்கும் பொதுவானது என்ற மனப்பாங்கு இங்குள்ள சில நிர்வாகிகளுக்கு இருப்பதில்லை.

Refusing food to non-Brahmins at temple kicks off a row

பிராமணர் சாப்பிட்ட இலையின் மீது வேறு ஜாதியினர் உருண்டு அங்கபிரதட்சணம் செய்தால் உடலில் உள்ள வியாதிகள் தீரும் என்ற நம்பிக்கையை சிலர் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் விதைத்துள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அங்கபிரதட்சண சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வது உண்டு. ஆனால், கடந்த சில வருடங்களாக சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருவதால் எச்சில் இலை அங்கபிரதட்சணத்துக்கு கூட்டம் குறைந்துள்ளது.

இந்நிலையில் மணிப்பால் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றுபவர் வனிதா என்.ஷெட்டி. இவர் உடுப்பி கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு போஜனசாலையிலுள்ள தரைத்தளத்திற்கு சென்று சாப்பிட அமர்ந்துள்ளார்.

சாப்பாடு பரிமாறுவதற்கு முன்பாக ஊழியர் ஒருவர் வந்து வனிதாவிடம் அவர் பிராமண ஜாதியை சேர்ந்தவரா என்று கேட்டுள்ளார். அவர், இல்லை என்று கூறியதால் அங்கிருந்து வெளியேறி முதலாவது தளத்திலுள்ள பிற ஜாதியினருக்கான இடத்தில் அமர்ந்து சாப்பிடும்படி அந்த ஊழியர் கூறிட்டார். இதனால் அவமானமடைந்த வனிதா சாப்பிடாமலேயே அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார்.

இதுகுறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில் கோயில் நிர்வாகத்தின் பாரபட்சமான தன்மைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் முதல்வர் சித்தராமையாவை பார்த்து மனு அளித்துள்ளனர்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய, உடுப்பி கிருஷ்ணர் கோயில் நிர்வாகி வித்யா வல்லபா தீர்த்த சுவாமி, இதுபோன்ற தவறு இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்வதாக தெரிவித்தார்.

English summary
Refusing food to non-Brahmins at temple kicks off a row Vanitha N Shetty, an assistant professor at Manipal, was asked to leave the dining hall of the Krishna Mutt because she wasn't a Brahmin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X