For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீதிபதி குன்ஹா ராஜினாமா செய்து விட்டதாக திடீர் வதந்தி - கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் மறுப்பு

Google Oneindia Tamil News

Rumour on Kunha creates tension
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா ராஜினாமா செய்து விட்டதாக வதந்தி பரவியுள்ளது.

ஆனால் இது வெறும் வதந்தியே, சற்றும் உண்மை இல்லை என்று கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் அலுவலகம் மறுத்துள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடி மற்றவர்களுக்கு தலா ரூ. 10 கோடி அபராதம் விதித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் நீதிபதி குன்ஹா.

இந்தத் தீர்ப்பு இரு விதமான கருத்துக்கள நாடு முழுவதும் பரப்பியுள்ளது. குன்ஹாவின் தீர்ப்பை பல கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ள நிலையில் சிலர் அதை விமர்சித்தும் வருகின்றனர். மனித உரிமை மீறலாக இந்தத் தீர்ப்பு உள்ளதாக இந்திய குடியரசுக் கட்சி, தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனுவும் செய்துள்ளது.

இந்த நிலையில் குன்ஹா ராஜினாமா செய்து விட்டதாக வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்டவற்றில் ஒரு தகவல் பரவியுள்ளது. இதை அதிமுகவினர் பரப்பி வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை என்று கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் அலுவலகம் மறுத்துள்ளது.

கொஞ்சம் விட்டா ஜெயலலிதா சிறையிலிருந்து தப்பினார்னு கூட வதந்தி கிளப்பினாலும் கிளப்புவாங்க போலிருக்கே...!

English summary
Rumour on Bangalore spl judge D Kunha created a brief tension in Whats app and FB.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X