For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாரு, பரேக் புத்தகங்களுக்கு மோடி தான் ஸ்பான்சர்... திக் விஜய் சிங்

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் குறித்து சர்ச்சைகுரிய கருத்துக்களை எழுதியுள்ள பி.சி.பரேக் மற்றும் பாருவின் புத்தகங்களுக்கு மோடி தான் ஸ்பான்சர் செய்துள்ளார் எனக் குற்றம் சாட்டியுள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங்.

பிரதமர் மன்மோகன் சிங்கின் முன்னாள் ஊடக ஆலோசகராக கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை இருந்தவர் சஞ்சய் பாரு. அண்மையில் இவர் எழுதி வெளியாகியுள்ள புத்தகத்தில், பிரதமர் அலுவலகத்துக்கு வருவதற்கு முன்பே மத்திய அரசின் கோப்புகளை சோனியா காந்தி பார்வையிட்டதாகவும், அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு, அதிகாரிகள் இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகளை சோனியா காந்தியே எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Sanjaya Baru and PC Parakh's books sponsored by Modi: Digvijaya Singh

அதேபோல், முன்னாள் நிலக்கரித்துறை செயலாளர் பி.சி.பரேக் எழுதிய புத்தகம் ஒன்று இன்று வெளியிடப்பட இருக்கிறது. அப்புத்தகத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அதிகாரம் மிகவும் குறைவு தான் என அவர் எழுதியுள்ளதாக தெரிகிறது.

இந்த இரு வேறு புத்தகங்களால் அரசியல் அரங்கில் கடும் சர்ச்சைகளை உண்டாகியுள்ளது. மற்ற கட்சியினர் பிரதமர் மன்மோகன்சிங்கை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாருவின் புத்தக கருத்திற்கு பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வ மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த இரு புத்தகங்கலும் பாஜகவின் தூண்டுதலாலும், பாஜக பிரதமர் வேட்பாளரான மோடியின் நிதியுதவியினாலும் எழுதப்பட்டிருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் திக் விஜய் சிங் கூறுகையில், ‘பிரதமர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியுள்ள இந்த இரண்டு புத்தகங்களுக்கும் மோடி தான் நிதியுதவி செய்துள்ளார்' எனத் தெரிவித்துள்ளார்.

English summary
Congress leader Digvijaya Singh has alleged that the books written by Prime Minister's former media advisor Sanjaya Baru and former coal secretary PC Parakh are sponsored by Bharatiya Janata Party Prime Ministerial candidate Narendra Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X