For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சகாயம் தலைமையிலான குழுவுக்கு எதிரான தமிழக அரசின் மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: கிரானைட் மற்றும் தாது மணல் கொள்ளை தொடர்பான சகாயம் தலைமையிலான குழுவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் சகாயம் குழுவின் விசாரணைக்கு தமிழக அரசு உதவி செய்யும் எனவும் உச்சநீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி தொடுத்த பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் ஒரு உத்தரவு பிறப்பித்தனர்.

அதில், தமிழகத்தில் உள்ள அனைத்து வகை கிரானைட் மற்றும் தாது மணல் குவாரிகளையும் ஆய்வு செய்து உயர்நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை சிறப்பு அதிகாரியாக நியமிப்பதாக அறிவிக்கப்பட்டது.

2 மாதத்துக்குள் அவர் தன்னுடைய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டிருந்தது. அவருக்கு தகுந்த பாதுகாப்பை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் வழங்க வேண்டும். மாநில வருவாய் நிர்வாகம் ஆய்வு செய்ய தேவையான நிர்வாக ரீதியான உதவிகளையும், நிதியையும் வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

English summary
Supreme Court on Thursday refused to petition filed by the Tamil Nadu government against the Madras High Court order of the appointment of IAS officer U Sangayam as a special officer to inspect mining activities in Tamil Nadu. The state government sought stay on the order, contesting that the government was taking stern actions against illegal mining.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X