For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீரப்பன் கூட்டாளிகள் நால்வர் உட்பட 15 பேரின் தூக்கு ரத்து- ஆயுள் தண்டனையாக குறைப்பு!!

By Mathi
Google Oneindia Tamil News

SC verdict on Veerappan aid's plea today
டெல்லி: சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் நால்வர் உட்பட மொத்தம் 15 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. இவர்களது தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 1993-ஆம் ஆண்டு கர்நாடகாவில் வீரப்பனின் கூட்டாளிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் அம்மாநில காவல் துறையினர் 22 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் வீரப்பனின் கூட்டாளிகளான ஞானப்பிரகாசம், பிலவேந்திரன், சைமன், மீசை மாதையன் ஆகிய 4 பேருக்கு மைசூர் தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

இதற்கு எதிராக அவர்கள் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில், ஆயுள் தண்டனையை தூக்கு தண்டனையாக அதிகரித்து உச்ச நீதிமன்றம், கடந்த 2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தீர்ப்பளித்தது.

தங்களது தூக்கு தண்டனையை குறைக்க கோரி 4 பேரும் அதே ஆண்டு பிப்ரவரி மாதம் ஜனாதிபதிக்கு கருணை மனுக்களை அனுப்பினர். அந்த மனுக்களை 9 ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஜனாதிபதி நிராகரித்தார்.

இதனையடுத்து, கருணை மனுக்களை நிராகரிக்க நீண்ட காலம் எடுத்துக் கொண்டதால், தூக்கு தண்டனையை குறைக்க கோரும் உரிமை உள்ளது எனக் கூறி, அவர்கள் சார்பில் வழக்கறிஞர் காலின் கான்சல்ஸ் உச்ச நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் மனுத் தாக்கல் செய்தார்.

இம் மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச், நால்வரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது.

மேலும் 4 பேரையும் தனி அறையில் அடைக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீரப்பன் கூட்டாளிகளான ஞானப்பிரகாசம், பிலவேந்திரன், மீசை மாதையன் ஆகியோர் பெல்காம் மாவட்ட சிறையிலும், சைமன் பெங்களூரு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் பல்வேறு வழக்குகளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு அவற்றை ரத்து செய்யக் கோரிய 11 பேரின் மனுவையும் ஏற்ற உச்சநீதிமன்றம், தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்தது.

English summary
In an landmark judgement, the Supreme Court on Tuesday ruled that inexplicable, inordinate delay in deciding on mercy plea of a death row convict is sufficient ground for commutation of death sentence to life. Delivering its verdict on a petition filed by 15 death row convicts – including four of Veerapppan aides – in which they had sought commutation of their death sentences as the government had not taken a decision on their mercy plea for years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X