For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகாராஷ்டிரா தேர்தல்: பாஜக- சிவசேனா கூட்டணியில் இழுபறி நீடிப்பு

By Mathi
Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக சிவசேனா மற்றும் பாரதிய ஜனதா இடையே இழுபறி நீடிக்கிறது.

தொகுதி பங்கீடு குறித்து முடிவெடுக்க சிவசேனாவுக்கு பாரதிய ஜனதா கட்சி விதித்திருந்த 12 மணி நேரம் கெடு முடிந்த நிலையில் அக்கட்சியின் மாநில கூட்டம் நேற்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுதிர் முங்கந்திவார், தொகுதி பங்கீடு தொடர்பாக சிவசேனாவுக்கு புதிய கோரிக்கையை அனுப்பி இருக்கிறோம்- மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் கூறினார்.

Seat-sharing row: Allies Shiv Sena, BJP try and hold on for now

மேலும் மகாராஷ்டிராவில் கடந்த 25 ஆண்டுகளில் சிவசேனா 59 தொகுதிகளில் வெற்றி பெற்றதே இல்லை என்பதை அந்தக் கட்சி கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பி்ட்டார். இவற்றை சிவசேனா பரிசீலனை செய்து தொகுதி பங்கீடு குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் கூட்டணியில் தொடரவே விரும்புவதாகவும் சுதிர் தெரிவித்தார்.

அதே நேரத்தில் தொகுதி பங்கீட்டில் கட்சியின் சுயமரியாதையை விட்டுக் கொடுக்க முடியாது என்று சிவசேனாவும் தெரிவித்துள்ளது.

பாஜகவைப் பொறுத்தவரை 130 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என்பது நிலைப்பாடு. ஆனால் சிவசேனாவோ 119 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என்கிறது.

இதனால் இரு கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டி இழுபறி நீடித்து வருகிறது

English summary
The Shiv Sena-BJP alliance was kept intact on Friday after senior leaders of both parties met and decided to begin negotiations with a new seat-sharing formula.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X