For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருமண பந்தத்துக்கு வெளியே பாலுறவு கொள்ளும் பெண்களை தூக்கில்தான் போடனும்- அபு ஆஸ்மி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மும்பை: திருமண பந்தத்துக்கு வெளியே பாலியல் உறவு வைத்து கொள்ளும் பெண்களை தூக்கில் போட வேண்டும் என்ற தனது கருத்தை மகாராஷ்டிரா பெண்கள் ஆணையத்தில் ஆஜராகி அபு ஆஸ்மி உறுதிப்பட தெரிவித்தார்.

பெண்கள் திருமண பந்தத்துக்கு வெளியே வேறு ஒரு ஆணுடன் உறவு வைத்தால், அந்த பெண்ணை தூக்கில் போட வேண்டும் என்று மராட்டிய மாநில சமாஜ்வாடி கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.வுமான அபு ஆஸ்மி சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டார்.

SP leader Abu Azmi explains his ‘punish women too’ remarks to women's commission

பெண்களின் மனதை புண்படுத்தும்படி பேசியதற்காக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அவருக்கு மகாராஷ்டிரா பெண்கள் ஆணையம் சம்மன் அனுப்பியது.

அதன்படி, அபு ஆஸ்மி நேற்று பெண்கள் கமிஷனில் அதன் தலைவர் சுஷிபென் ஷா முன்னிலையில் ஆஜரானார். அப்போது, எழுத்துப்பூர்வமாக அவர் விளக்கம் அளித்தார்.

அதில், திருமண பந்தத்துக்கு வெளியே செக்ஸ் உறவு வைத்து கொள்ளும் பெண்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்ற தனது கருத்தை உறுதிப்பட தெரிவித்தார்.

பின்னர் அபு ஆஸ்மி செய்தியாளர்களிடம் கூறும்போது, ''எங்களது மதம் திருமண பந்தத்துக்கு வெளியே பெண்களை பாலியல் உறவு வைக்க அனுமதிக்காது. ஆணும், பெண்ணும் திருமண பந்தத்தை மீறியோ அல்லது பரஸ்பர சம்மத்துடன் உறவு வைத்தாலும் அவர்கள் இருவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பெண்கள் சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். தாமாக முன் வந்து ஆணுடன் பாலியல் உறவு வைத்து கொள்ளும் அவர்கள், பின்னர் ஆண்கள் மீது புகார் கொடுக்கிறார்கள். இதனால் பேரழிவு விளைவுகள் ஏற்படுகிறது" என்றார்.

பெண்கள் ஆணையம்

அதேசமயம், பெண்கள் ஆணைய தலைவர் சுஷிபென் ஷா, ''இந்திய அரசியலமைப்பு சட்டம், உச்ச நீதிமன்றம் போன்றவை குடும்ப வன்கொடுமை சட்டத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது முஸ்லிம் பெண்கள் உள்பட அனைத்து மத பெண்களுக்கும் பாதுகாப்பு அளித்து வருகிறது என்று கூறினார்.

நமது நாட்டில் உள்ள சட்டதிட்டங்கள் அனைத்தும் சாதி, மதம், இனம் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் அனைத்து பெண்களுக்கும் சமமானது. சமுதாயத்தில் உயர்மட்டத்தில் இருக்கும் தலைவர்கள் இதுபோன்ற பிற்போக்கு கருத்துக்களை வெளியிடக்கூடாது" என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

English summary
Samajwadi Party leader Abu Azmi, a day after Mumbai went to polls, was present before Susieben Shah, chief of the Maharashtra State Commission for Women to explain his alleged controversial remarks that women who have sex outside their marriage must be punished too.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X