For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லியில் சுஷ்மா ஸ்வராஜூடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்கள் சந்திப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஈழத் தமிழர் பிரச்னையில் இந்தியா ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூடம் இந்தியா வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி.க்கள், டெல்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Sri Lanka Tamil National Alliance MPs meet Sushma

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் இரா.சம்பந்தன் கூறியதாவது:

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடனான சந்திப்பு திருப்தியாக இருந்தது,

தமிழர் பிரச்னையில் இந்தியா ஆக்கப்பூர்வமாக செயல்பட வலியுறுத்தினோம். இலங்கையில் தமிழர் பகுதிகளில் சி்ங்கள குடியேற்றங்கள் அதிகரிக்கின்றன. சிங்கள குடியேற்றங்களை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

இவ்வாறு சம்பந்தன் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு குழுவினர் நாளை சந்தித்து பேசுகின்றனர்.

English summary
The Tamil National Alliance (TNA) delegation met External Affairs Minister Sushma Swaraj in delhi on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X