For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'சஹாரா' சுப்ரதா ராயை ஜாமீனில் விடுவிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

Supreme Court denies bail to Sahara supremo Subrata Roy
டெல்லி: ரூ20 ஆயிரம் கோடி மோசடி வழக்கில் சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய்க்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.20 ஆயிரம் கோடியை வழங்கவில்லை என சஹாரா நிறுவனம் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில் ஆஜராகாமல் இருந்த சஹாரா நிறுவன தலைவர் சுப்ரதா ராய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த மார்ச் 4-ந் தேதி முதல் சிறையில் உள்ள சுப்ரதா ராயை ஜாமீனில் விடுவிக்க ரூ.10 ஆயிரம் கோடி செலுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த தொகையை திரட்ட முடியாத நிலையில் உள்ள சஹாரா நிறுவனம், சொத்துக்களை விற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சொத்துக்களை விற்பதற்காக தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என சுப்ரதாராய் மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சுப்ரதா ராயை ஜாமீனில் விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுத்தது. இதனால் அவர் தொடர்ந்தும் டெல்லி திஹா சிறையில் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

English summary
The Supreme Court today denied the bail application of Sahara supremo Subrata Roy, who has been held in jail for more than four months over his group's failure to repay investors who bought bonds that were later ruled to be illegal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X