For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா மீது புதிய சொத்து குவிப்பு வழக்கு: சுப்பிரமணியன் சுவாமி மிரட்டல்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது புதிய சொத்துக் குவிப்பு வழக்கை தாம் தொடரப்போவதாக பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி மிரட்டல் விடுத்துள்ளார்.

தமிழக மீனவர் பிரச்சனையில் தலையிட்டு தமிழ்நாட்டின் கோபத்துக்குள்ளானார் சுப்பிரமணியன் சுவாமி. இந்த விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்ததால் அவர் மீது அடுத்தடுத்து 2 அவதூறு வழக்குகள் போடப்பட்டன.

Swamy threats Jaya another asset case

இதனைத் தொடர்ந்து "தீவிரவாதிகளின் நண்பனாக" ஜெ. அரசு செயல்படுகிறது ட்விட்டரில் சுப்பிரமணியன் சுவாமி பதிவைப் போட நேற்று 3வது அவதூறு வழக்கை முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்தார்.

இதற்கு பதிலாக நானும் ஜெயலலிதா மீது அவதூறு வழக்கு தொடருவேன் என்று ட்விட்டரில் கொந்தளித்திருந்ததோடு முதல்வரை கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்த நிலையில் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில், நீலகிரியைச் சேர்ந்த பாஜக தொண்டர்கள் இன்று என்னை சந்தித்தனர். அப்போது ஜெயலலிதா, சசிகலா தொடர்புடைய கொடநாடு சொத்துகள் பற்றிய பட்டியலைக் கொடுத்தனர். இன்னொரு சொத்துக் குவிப்பு வழக்கு வருகிறது என்று மிரட்டல் விடுக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

English summary
BJP's Subramanian Swamy today said in tweet page, "BJP workers of Nilgiris met me today and gave me a list of properties of JJ / SKN in Kodaganad. Another disprop assets case on the cards" on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X