For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு: கேரளாவில் சுவிஸ் நாட்டு பிரஜை கைது

By Mathi
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: மாவோயிஸ்டுகள் தொடர்பு வைத்திருந்ததாக கேரளாவில் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஜோனாதன் போல்ட் என்பவர் கைது செய்யப்பட்டார்.

கேரளாவை சேர்ந்த சினோஜ் ஆந்திரா-கர்நாடகா எல்லையில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கடந்த மாதம் பலியானார். அம்மாநிலத்தில் உள்ள வளப்பாடில் உள்ள சினோஜின் ஆதரவாளர்கள் நினைவு நாள் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த கூட்டத்தில் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த 24 வயது ஜோனாதன் என்பவரும் கலந்து கொண்டார். சுற்றுலா விசாவில் கேரளாவுக்கு வந்திருந்த அவர் சினோஜ் நினைவு நாள் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.

இதனால் ஜோனாதனை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து மாவோயிஸ்ட் இயக்கத்தின் சித்தாந்த இதழ்களும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

English summary
A 24-year-old Swiss national has been arrested after he allegedly attended a function organised in memory of a Maoist activist at nearby Valappad.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X