For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அபராத தொகைக்காக ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் உட்பட 3 ஆயிரம் ஏக்கர் நிலம் பறிமுதலா?

By Mathi
Google Oneindia Tamil News

பெங்களூர்: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட அபராத தொகைக்காக அவரது பெயரிலான 3 ஆயிரம் ஏக்கர் நிலம் பறிமுதல் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு ரூ100 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராத தொகைக்காக நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட சென்னை போயஸ் தோட்டம் வீடு, கோடநாடு எஸ்டேட் என 211 சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.

The court order to sold Jaya's 3,000 acres of land

1988-ம் ஆண்டு ஊழல் எதிர்ப்பு சட்டம் பிரிவு 13 (1) (இ) மற்றும் 13 (டி) ஆகிய பிரிவுகளில் 7 வருடம் சிறை மற்றும் சேர்க்கப்பட்ட சொத்து மதிப்பின் அடிப்படையில் அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டு இருக்கிறது.

இதில் ஜெயலலிதா பெயரில் 6 நிறுவனங்களும் 3 ஆயிரம் ஏக்கர் நிலமும் இருக்கிறது. கொடநாடு எஸ்டேட்டில் 900 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் அன்றைய மதிப்பு ரூ. 7.5 கோடி. இவற்றின் இன்றைய விலை நிலவரம் பல மடங்கு அதிகமாகி உள்ளது.

ரூ. 100 கோடி அபராதம் செலுத்தாவிட்டால் இந்த 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பறிமுதல் செய்யவும் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருப்பதால் இவை அனைத்தும் பறிமுதலாகக் கூடும் எனக் கூறப்படுகிறது.

English summary
The Bangalore Special court has ordered to sold 3,000 acres of land assets to raise the Rs. 100 crores penalty imposed on Jayalalithaa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X