For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அன்று ஜெயில் கைதி…இன்று தாஜ்மஹால் நிறுவன மேலாளர் – திஹார் ஜெயிலின் நன்கொடை இது!

Google Oneindia Tamil News

டெல்லி: உங்களுக்கு ராஜூ பிரசாந்த்தை தெரியுமா? முன்பு தெரியாமல் இருந்திருக்கலாம்.

ஆனால், இப்போது அவர் தாஜ்மஹால் நிறுவனங்களின் துணை வர்த்தக மேலாளர்.

முன்போ, கொலைக்காக திஹார் ஜெயிலில் தண்டனை அனுபவித்த குற்றவாளி.ஆச்சரியமாக இருக்கின்றதா? மேலும் கேளுங்கள்.

திஹாரில் குற்றவாளி:

திஹார் ஜெயிலில் கிட்டத்தட்ட 8 வருடங்கள் தண்டனை அனுபவித்தவர் ராஜூ பிரசாந்த்.அவர்தான் தற்போது 35,000 ரூபாய் சம்பளத்தில் தாஜ்மஹால் நிறுவனத்தில் மேலாளர் ஆகி உள்ளார்.

சமூக சேவை படிப்பு:

இந்த மிக அதிகமான சம்பளத்தைப் பெற்றுள்ள ராஜூ, ஜெயிலில் இருக்கும்போதே சமூக சேவைக்கான இளநிலைப் படிப்பை முடித்துள்ளார்.

நன்நடத்தையால் விடுதலை:

"நான் கொலைக்குற்றவாளியாக இங்கு வந்தபோது எனக்கு வயது 18.என்னுடைய நன்நடத்தையால் தண்டனையானது குறைக்கப்பட்டது.ஜெயிலிலேயே படிப்பை முடித்த நான் இன்று ஒரு வேலையையும் பெற்றுள்ளேன்.நான் கண்டிப்பாக என்னுடைய ஊழியர்களுக்கு நல்லதையே செய்வேன்" என்று கூறியுள்ளார் பிரசாந்த்.

வேலைவாய்ப்பு முகாம்:

கிட்டதட்ட 66 ஜெயில் கைதிகள் கடந்த வாரம் விடுதலையாகினர்.அதற்கு முன்பாக அவர்களுக்காக ஜெயில் நிர்வாகம் வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது.

தனியார் நிறுவனங்கள்:

வெண்டேட்டா மற்றும் ஐடிஈஐஎம் ஆகிய நிறுவனங்கள் அதிக அளவிலான வேலைவாய்ப்புகளையும், தாஜ்மஹால் நிறுவனம் அதிக அளவிலான சம்பளமுள்ள வேலைவாய்ப்பையும் அளித்தன.

விரைவில் வேலை:

இந்த முகாமில் வேலைவாய்ப்பு பெற்ற கைதிகள் அனைவரும் விரைவில் வேலையில் அமர்வார்கள் என்று திஹார் ஜெயிலின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெண் கைதிகள் இல்லை:

31 நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றன.மேலும், தேர்வானது நன்நடத்தை மற்றும் படிப்பின் அடிப்படையில் நடைபெற்றுள்ளது.ஆனால், இந்த வேலைவாய்ப்பு முகாமில் பெண் கைதிகள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்:

திஹார் ஜெயிலின் உயர் அதிகாரி விமலா மெக்ரா வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.மேலும், ஜெயிலில் உள்ள குறைபாடுகளைப் பற்றிக் கேட்டறிந்தார்.

English summary
Raju Parasnath, who has spent eight years in Tihar on the charges of murder, has secured a place as Assistant Business Development Manager for the salary of Rs. 35,000 per month with Taj Mahal group.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X