For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருமலா திருப்பதி தேவஸ்தான நில சொத்துக்களின் மதிப்பு ரூ 9,800 கோடி... நேபாளத்திலும் நிலம் உள்ளது!

Google Oneindia Tamil News

Tirumala Tirupati Devasthanam owns Rs 9,800 cr properties across India, Nepal
ஹைதராபாத்: திருப்பதி தேவஸ்தானத்திற்கு தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி நில சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ. 9800 கோடி என அறிவிக்கப் பட்டுள்ளது.

இன்று ஆந்திர மாநில சட்டசபையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுப்பினர் திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் சொத்துக்கள் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்த அரசு, ‘திருமலா திருப்பதி தேவஸ்தானத்திற்கு தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி சுமார் ரூ. 9800 கோடி மதிப்பில் நில சொத்துகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இவை ஆந்திராவில் மட்டுமின்றி நேபாளம், டெல்லி, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா, பாண்டிச்சேரி, ஹரியானா மற்றும் ஒடிசாவில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகள்...

மேலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுப்பினர் டாக்டர் பெட்டரெட்டிகாரி ராமச்சந்திர ரெட்டி கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து பேசிய மாநில உதவி நிதியமைச்சர் மணிக்கயல ராவ் கூறும் போது, ‘திருமலா திருப்பதி தேவஸ்தானம் சொத்துக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.' எனத் தெரிவித்தார்.

நிலப்பகுதி...

இவற்றில் தெலுங்கானாப் பகுதியையும் சேர்த்து ஆந்திராவில் மட்டும் 4,657.51 ஏக்கர் நிலம் தேவஸ்தானத்திற்கு சொந்தமானதாக உள்ளதாம்.

நேபாளத்திலும்...

இது தவிர ஆந்திராவிற்கு வெளியே பிற மாநிலங்களில் 125.75 ஏக்கர் நிலம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதில் நேபாளமும் அடங்கும்.

தேவஸ்தான ஊழியர்கள்...

அதேபோல், தேவஸ்தானத்திற்கு என 16 ஆயிரம் ஊழியர்கள், 3 ஐஏஎஸ் மற்றும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி உள்ளதாகவும், நிலம் தொடர்பான சட்ட விவகாரங்களைப் பார்ப்பதற்கெனவே தனிப்பட்ட செல் ஒன்று அமைக்கப் பட்டுள்ளதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டது.

English summary
Endowments Minister Manikyal Rao informed the Assembly during Question Hour on Wednesday on the landed properties. “The market value of the landed properties owned by the TTD is about Rs 9,800 crore” said Manikyal Rao.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X