For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறது இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழு!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா வந்துள்ள இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் குழு பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்திக்க உள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான 5 எம்.பிக்கள் அடங்கிய குழு நேற்று டெல்லி வந்தடைந்தது.

TNA team to meet Modi on Saturday

இக்குழுவினர் பிரதமர் நரேந்திர மோடி நாளை சந்தித்து பேச உள்ளனர். நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் இலங்கை தமிழர் பிரதிநிதிகளுடன் நடத்தப்படும் முதலாவது சந்திப்பு இது.

பிரதமருடனான சந்திப்பின் போது இலங்கையில் தமிழர்கள் வாழும் வடகிழக்கு மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதற்கு இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுப்பது பற்றி விவாதிக்கப்பட இருக்கிறது.

முன்னதாக இன்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை இக்குழு சந்தித்து பேசியது.

மேலும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் சந்திக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

English summary
Senior members of the Tamil National Alliance (TNA), an amalgam of Tamil political parties currently in power in Sri Lanka’s Tamil-majority Northern Province, will meet Prime Minister Narendra Modi in New Delhi on August 23.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X