For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீன அதிபர் பெயரை 'லெவன் ஜின்பிங்' என்று சொன்ன தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் நீக்கம்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: சீன அதிபர் ஜி ஜின்பிங் பெயரை லெவன் ஜின்பிங் என்று தவறாக உச்சரித்த தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் பெண் செய்தி வாசிப்பாளர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவில் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணம் குறித்து பிற ஊடகங்களை போலவே மத்திய அரசின் தூர்தர்ஷன் தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பியது.

TV anchor sacked after naming China's Xi 'Eleven'

தூர்தர்ஷனின் புதன்கிழமை செய்தி வாசித்த பெண் செய்தியாளர் ஒருவர், சீன அதிபர் குறித்த செய்தியின்போது, அவரது பெயரை லெவன் ஜின்பிங் என்று உச்சரித்துள்ளார். இதற்கு காரணம் ஆங்கிலத்தில் Xi Jinping என்று சீன அதிபர் பெயர் குறிப்பிடப்படுவதுதான். ரோமன் எண் படி Xi என்றால் 11ம் நம்பரை குறிக்கும். எனவேதான் செய்தி வாசிப்பாளர் லெவன் ஜின்பிங் என்று தவறாக புரிந்து கொண்டு உச்சரித்துள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தூர்தர்ஷன் உயர் அதிகாரிகள், அப்பெண்ணை பணி நீக்கம் செய்துள்ளனர். இதுகுறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத தூர்தர்ஷன் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இது ஒரு மன்னிக்க முடியாத குற்றம். செய்தி வாசித்தது நிரந்தர ஊழியர் கிடையாது. பகுதி நேர செய்தி வாசிப்பாளராகும். பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதால் தொழில்முறை திறமைசாலிகளை தவிர்த்து இது போல பகுதி நேர செய்தி வாசிப்பாளர்களை பயன்படுத்தி வருகிறோம். இன்னும் சில மாதங்களுக்கு அந்த பெண்ணுக்கு செய்தி வாசிக்கும் வாய்ப்பு தரப்போவதில்லை" என்று தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சிகளுக்கு போட்டி போட முடியாமல் தூர்தர்ஷன் தடுமாறி வரும் நிலையில், இதுபோன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது தகவல் ஒளிபரப்பு துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

English summary
A TV news anchor has been sacked after she referred to Chinese President Xi Jinping as 'Eleven' Jinping, apparently confusing Xi's name with the Roman numerals XI, a senior official at the state television channel said on Friday .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X