For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாணவர்கள் மீது நடந்து சென்ற குஜராத் பாஜக வேட்பாளர்... பரபரப்பு காட்சிகள்

Google Oneindia Tamil News

அகமதாபாத்: பள்ளி மாணவர்களின் முதுகு மற்றும் மார்பில் ஏறி பாஜக வேட்பாளர் ஒருவர் நடந்து செல்வது போன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

குஜராத் மாநில ராஜ்காட் தொகுதியின் பாஜக வேட்பாளர் மோகன் குண்டாரியா. இவர் சமீபத்தில் தங்கராவில் உள்ள பள்ளி மாணவர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி ஒன்றிற்கு விருந்தினராக சென்றிருந்தார். அங்கு மாணவர்கள் தங்களது திறமைகளை நிரூபிக்கும் விதமாக விதவிதமானப் யோகாக்களை செய்து காட்டியுள்ளனர். அதன் ஒருகட்டமாக வளைந்து நிற்கும் மாணவர்களின் உடல்களின் மீது ஏறி மோகன் குண்டாரியா நடப்பது போன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

Video of BJP candidate from Narendra Modi's Gujarat walking over children goes viral online

அந்த வீடியோவில் காவி நிற கொடிகளை அசைக்கும் தனது தொண்டர்களின் உதவியோடு மாணவர்களின் முதுகிலும், மார்பிலும் ஏறி நடக்கிறார் மோகன். மாணவர்கள் வெள்ளை நிற உடையில் குனிந்தவாறும், சாய்ந்தவாரும் நிற்பது போலவும் காட்சிகள் உள்ளன.

இவ்வாறு பாஜக வேட்பாளர் ஒருவர் நடந்து கொண்டதற்கு இணையத்தில் கண்டனக் குரல்கள் எழும்பியுள்ளன. ஆனால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வற்புறுத்தலின் பேரிலேயே தான் அவ்வாறு மாணவர்கள் முதுகில் ஏறி நடந்ததாக மோகன் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு மோகன் குண்டாரியா அளித்துள்ள பேட்டியில், ‘உடல் ரீதியாக மற்றவர்களை காயப்படுத்தும் அளவிற்கு நான் கொடுமையானவன் இல்லை. மாணவர்கள் தங்களது உடற்கட்டை நிரூபிப்பதற்காகவே என்னை ஏறி அவ்வாறு நடக்கச் சொன்னார்கள். எனவே தான் நான் அவ்வாறு செய்தேன்' எனத் தெரிவித்துள்ளார்.

English summary
In what could be detrimental to the BJP's prospects in the Lok Sabha elections, a video showing Kundariya walking over school kids' backs at a yoga camp organised by the Arya Samaj at Maharshi Dayanand Saraswati Updeshak Vidyalaya, an all-boys school in Tankara, has gone viral on cyber space.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X