For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எந்த பட்டனை அழுத்தினாலும் காங்கிரஸுக்கு ஓட்டு: புனேவில் வாக்குப்பதிவு நிறுத்தம், எந்திரம் மாற்றம்

By Siva
|

புனே: புனேவில் உள்ள ஷம்ராவ் கல்மாடி உயர் நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர் பழுதான மின்னனு வாக்குப்பதிவு எந்திரம் மாற்றப்பட்ட பிறகு மீண்டும் வாக்குப்பதிவு துவங்கியது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள இரன்டாவானேவில் இருக்கும் ஷம்ராவ் கல்மாடி உயர் நிலைப்பள்ளியில் இன்று காலை 7.15 மணிக்கு நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது. 28 பேர் வாக்களித்துவிட்டனர். 29வதாக சென்ற பெண் தனக்கு பிடித்த வாக்காளருக்கு வாக்களித்தார்.

Voting stopped at Shamrao Kalmadi school Pune, machine replaced

ஆனால் வாக்கு காங்கிரஸுக்கு சென்றுவிட்டது. அதன் பிறகே மின்னனு வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் காங்கிரஸுக்கு வாக்குப்பதிவாவது தெரிய வந்தது. இதையடுத்து வாக்குப்பதிவு உடனடியாக நிறுத்தப்பட்டது. புதிய வாக்குப்பதிவு எந்திரத்தை கொண்டு வர ஒன்றரை மணிநேரம் ஆனது.

அதன் பிறகே வாக்குப்பதிவு மீண்டும் துவங்கப்பட்டது. பழுதான எந்திரத்தில் வாக்களித்த 28 பேரையும் மீண்டும் வாக்களிக்க அனுமதிப்பது என்று தேர்தல் குழு முடிவு செய்தது.

English summary
Polling was stopped at a polling booth in Pune after voters were shocked to know that electronic voting machine displayed a vote for Congress even if somebody pressed any button on the EVM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X