For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உயரதிகாரிகளின் உத்தரவால் 1993ம் ஆண்டு மம்தாவை அடித்தோம் ... கொல்கத்தா போலீஸ்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: உயரதிகாரிகளின் உத்தரவைத் தொடர்ந்தே கடந்த 1993ம் ஆண்டு மம்தா பனர்ஜியைத் தாக்கியதாக சுஷாந்தா சட்டர்ஜி கமிஷனிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் ஆகியோர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கடந்த 1993ம் ஆண்டு திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில் மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற பேரணியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். இத்தாக்குதலில் படுகாயமடைந்தார் மம்தா. இதனால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.

We were told to assault Mamata Banerjee in 1993: Bengal cops

இந்தத் தாக்குதல் தொடர்பாக சுஷாந்தா சட்டர்ஜி கமிஷன் விசாரணை மேற்கொண்டு வருகிறது. அப்போது தாக்குதலில் ஈடுபட்ட ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘உயரதிகாரிகளின் உத்தரவாலேயே மம்தா பானர்ஜியைத் தாக்கியதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே போலீஸ் கமிஷனர் துஷார் தலுக்தர் கமிஷனிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், நான் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிடல்லை. மாறாக, அப்போது ஆயுதப் படை துணைக் கமிஷனராக இருந்த முகுல் செங்குப்தா, தேபன் பிஸ்வாஸ், சித்தார்த்த ராய ஆகியோர்தான் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டனர் என்று கூறியிருந்தார்.

ராய் தனது வாக்குமூலத்தின்போது, செங்குப்தா மீது பழியைப் போட்டார். மேலும், தான் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிடவில்லை என்றும் செங்குப்தாதான் அந்த முடிவை எடுத்தார் என்றும் கூறியிருந்தார்.

மேலும் எஸ்பிளனேட் கிழக்குப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் யாரும் காயமடையவிலலை என்றும் அவர் கூறியிருந்தார். அங்குதான அவர் அப்போது பணியில் இருந்தார். துப்பாக்கிச் சூட்டின்போது ஒரே ஒரு நபர் மட்டுமே லேசான காயமடைந்ததாகவும அவர் கூறியுள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்ததாகவும் கூறியுள்ளார் ராய்.

ஆனால் ராய் சொல்வது பொய் என்று திரிணாமூல் எம்.எல்.ஏக்களான சதன் பாண்டே மற்றும் பரேஷ் பால் ஆகியோர் கூறியுள்ளனர்.

அதேசமயம், செங்குப்தா வாக்குமூலம் அளித்தபோது தான் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிடவில்லை எனறு மறுத்தார். தலுக்தரை தான் சந்திக்க முயன்றதாகவும், ஆனால் அது முடியாமல் போனதாகவும் கூறியிருந்தார் அவர்.

இந்த வழக்கில் வாஜ்பாய், ஜோஹ்ரி, என்.கே.சிங் ஆகிய மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் வாக்குமூலம் அளிப்பதிலிருந்து விலக்கு கோரி ஏற்கனவே கொல்கத்தா உயர்நீதின்றத்தை நாடியுள்ளனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

முன்னதாக முன்னாள் முதல்வர் புத்தேவ் பட்டசார்ஜி கமிஷன் முன்பு ஆஜராகி போலீஸ் துப்பாக்கிக் சூடு நியாமானதே என்று வாக்குமூலம் அளித்துளளார்.

English summary
A police inspector and a constable have told the Justice (retd) Sushanta Chatterjee Commission that they had been asked by a top IPS officer to assault Mamata Banerjee on July 21, 1993.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X