For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோர்ட்டுக்கு வெளியே காரில் அமர்ந்து ஓ.பன்னீருடன் ஆலோசனை நடத்திய ஜெயலலிதா!

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயலலிதா தீர்ப்பு வழங்கும் முன்பு வெளியே வந்து அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசிவிட்டு சென்றார்.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்து வந்த பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது.

What does Jaya tell O.Panneer Selvam in the court premises?

இதில் ஜெயலலிதா ரூ.100 கோடி அபராதம் செலுத்த தவறினால் அவர் மேலும் ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிபதி குன்ஹா தெரிவித்துள்ளார். இந்நிலையில் தீர்ப்பு அறிவிக்கப்படும் முன்பு ஜெயலலிதா நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தார்.

அப்போது நீதிமன்றத்திற்கு வெளியே நின்ற அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்திடம் மட்டும் ஏதோ பேசிவிட்டு சென்றார்.

தான் சிறைக்குச் செல்வதால் அடுத்த முதல்வர், கட்சி விவகாரங்கள் ஆகியவை குறித்து ஜெயலலிதா அவரிடம் ஆலோசித்து இருக்கலாம் என்று தெரிகிறது.

English summary
Jayalalithaa came out of court premises once before the verdict was pronounced. She said something to minsiter O. Panneer Selvam and went back.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X