For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாமியார், மகளை கொல்ல கள்ளக்காதலனுக்கு வாட்ஸ்அப்-ல் உதவிய பெண் சாப்ட்வேர் இன்ஜினியர்

By Veera Kumar
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: மாமியாரையும், தனது 3வயது மகளையும் கொலை செய்ய கள்ளக்காதலனுக்கு வாட்ஸ்அப் மூலம் உதவி செய்த பெண் கம்ப்யூட்டர் இன்ஜினியர் கைது செய்யப்பட்டார். இந்தக் கொலை சதியில் இருந்து கணவர் உயிரோடு தப்பிவிட்டார். ஆனால், மாமியாரும் குழந்தையும் பலியாகிவிட்டனர்.

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்திலுள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இன்ஜினியர் நினோ மாத்யூவுக்கும் (40) அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் பென் இன்ஜினியர் அனுசாந்திக்கும் (30) இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

புதன்கிழமை நாள் குறிப்பு...

புதன்கிழமை நாள் குறிப்பு...

அனு சாந்திக்கு ஏற்கனவே லிஜேஷ் என்பவருடன் திருமணமாகி 3 வயதில் ஸ்வஷ்டிகா என்ற பெண் குழந்தை இருந்தது. கள்ளக்காதலுக்கு இடையூறாக கணவன், மகள் மற்றும் தனது மாமியார் ஓமனா ஆகியோர் இருப்பதாக நினைத்த அனுசாந்தி, நினோ மாத்யூவின் உதவியுடன் அவர்களைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதற்காக கடந்த புதன்கிழமை நாள் குறிக்கப்பட்டது.

பத்திரிகை தர வந்தேன்

பத்திரிகை தர வந்தேன்

அனுசாந்தி வழக்கம்போல வேலைக்கு சென்ற நேரத்தில் நினோமாத்யூ அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டில் இருந்த ஓமனாவிடம் அவரது மகன் லிஜேஷின் நண்பன் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு திருமணப் பத்திரிகை கொடுக்க வந்ததாக நாடகமாடியுள்ளார்.

முதிய பெண்ணையும், குழந்தையையும் கொன்ற பாவி...

முதிய பெண்ணையும், குழந்தையையும் கொன்ற பாவி...

வீ்ட்டுக்குள் அழைத்து வைத்து உபசரித்துக் கொண்டிருந்தபோது மறைத்து வைத்திருந்த கத்தியால் ஓமனாவையும், ஸ்வஷ்டிகாவையும் அடுத்தடுத்து குத்திக்கொலை செய்துள்ளார்.

கணவன் தப்பினார்

கணவன் தப்பினார்

அப்போது வீட்டுக்குள் வந்த லிஜேஷையும் கத்தியால் தாக்கியுள்ளான். ஆனால் அவர் காயங்களுடன் தப்பியோடி போலீசாருக்கு சம்பவம் குறித்து தகவல் கொடுத்தார். போலீசார் நினோமாத்யூவை கைது செய்தனர்.

அவனிடம் விசாரித்தபோது தான், அனுசாந்தியுடன் சேர்ந்து திட்டமிட்டு இக்கொலைகளை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளான். இதையடுத்து அனுசாந்தியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாட்ஸ்அப்பில் ஸ்கெட்ச்

வாட்ஸ்அப்பில் ஸ்கெட்ச்

தனது குடும்பத்தார் அத்தனை பேரையும் கொலை செய்துவிட்டு வீட்டை விட்டு எப்படி தப்பியோடுவது என்பது குறித்து அனுசாந்திதான் தனது கள்ளக்காதலனுக்கு ஐடியா கொடுத்துள்ளார். இதற்காக வீட்டின் படங்களையும், ஒவ்வெரு அறையையும் செல்போனில் போட்டோ எடுத்து அதை வாட்ஸ் அப் மூலம் நினோமாத்யூவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

பிளான் ஃபிளாப்

பிளான் ஃபிளாப்

கொள்ளையர்கள் வந்து கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த தங்க நகைகளை எடுத்துக்கொண்டு தப்பியோடிவிட்டதாக ஜோடித்துவிடலாம் என்று திட்டமிட்டிருந்த கள்ளக்காதலர்களின் பிளான் ஃபிளாப் ஆகிவிட்டது.

நினோமாத்யூவும் திருணமானவன், 4 வயதில் குழந்தை...

நினோமாத்யூவும் திருணமானவன், 4 வயதில் குழந்தை...

நினோமாத்யூவுக்கு திருமணமாகி 4 வயதில் பெண் குழந்தை உள்ளதும், அனுசாந்தியுடனான கள்ளத்தொடர்பை தெரிந்து கொண்டு அவரது மனைவி வேறு வீட்டில் வசித்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

English summary
Arrested techi Anu Santhi used WhatsApp application to hatch the murder plot by sending the pictures of the rooms of her house and escape route behind her house to her paramour Nino.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X