For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"பிரபாகரனை தூக்கிலிட ஒப்படையுங்கள்- பெங்களூரில் ராஜிவிடம் கோரிக்கை வைத்த ஜெயவர்த்தனே"

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை தம்மிடம் ஒப்படைக்க வேண்டும்.. மேயர் துரையப்பா கொலை வழக்கில் அவரை தூக்கிலிட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியிடம் இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த ஜெயவர்த்தனே கோரிக்கை விடுத்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங்கின் சுயசரிதை புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

1987ஆம் ஆண்டு ராஜிவ் காலத்தில் இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர்களில் நட்வர்சிங்கும் ஒருவர். நட்வர்சிங் 410 பக்கங்கள் கொண்ட தமது சுயசரிதை புத்தகத்தை நேற்று வெளியிட்டார்.

இந்த புத்தகத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, முன்னாள் ராஜிவ் காந்தி உள்ளிட்டோர் குறித்து விமர்சனங்கள் இடம்பெற்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்தும் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

நட்வர்சிங் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:

பெங்களூரில் பிரபாகரன்

பெங்களூரில் பிரபாகரன்

1986ஆம் ஆண்டு பெங்களூரில் சார்க் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்த்தனே கலந்து கொண்டார். அப்போது ரகசியமாக பிரபாகரனையும் நாங்கள் பெங்களூர் வரவழைத்திருந்தோம்.

பிரபாகரனை ஒப்படைக்க வேண்டும்

பிரபாகரனை ஒப்படைக்க வேண்டும்

ஆனால் இதை எப்படியோ ஜெயவர்த்தனே தெரிந்து கொண்டார். அதனால் ராஜிவ்காந்தியிடம் பிரபாகரனை தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

தூக்கிலிட வேண்டும்

தூக்கிலிட வேண்டும்

யாழ்ப்பாண மேயராக இருந்த தமிழரான துரையப்பாவை கொன்றவர் பிரபாகரன். அதனால் அவரை ஒப்படைத்தால்தான் யாழ்ப்பாணத்தில் அவரைத் தூக்கிலிட முடியும் என்றார் ஜெயவர்த்தனே. ஆனால் ராஜிவ் அதை நிராகரித்துவிட்டார்.

இலங்கை பற்றிய புரிதல் இல்லாத ராஜிவ்

இலங்கை பற்றிய புரிதல் இல்லாத ராஜிவ்

ராஜிவ் காந்தியைப் பொறுத்தவரையில் இலங்கை இனப்பிரச்சனை குறித்த புரிதல் இல்லை. பஞ்சாப் மற்றும் அஸ்ஸாம் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்தது போல இலங்கை பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும் என்று நம்பினார் ராஜிவ் காந்தி. ஏதோ சில காரணங்களுக்காக இலங்கை இனப்பிரச்சனைக்கு விரைவாக தீர்வு காண ராஜிவ் விரும்பினார்.

தமிழீழ கோரிக்கையை கைவிட முடியாது

தமிழீழ கோரிக்கையை கைவிட முடியாது

பிரபாகரனை இந்திய- இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக நேரில் சந்தித்து பேசினேன். அப்போது இந்திய, இலங்கை ராணுவங்களை விடுதலைப் புலிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவித்தேன். ஆனால் பிரபாகரனோ, ஒருபோதும் தமிழீழக் கோரிக்கையை விட்டுக் கொடுக்க வேண்டும். என் உயிரே போனாலும் தமிழீழ கோரிக்கையை விட்டுக் கொடுக்க முடியாது என்று உறுதியாகக் கூறினார்

நரசிம்மராவ் விரும்பவில்லை

நரசிம்மராவ் விரும்பவில்லை

இந்திய- இலங்கை ஒப்பந்தம் ஏற்படுவதை அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் நரசிம்மராவ் விரும்பவில்லை..அவரைப் பொறுத்தவரையில் பிரதமர் ராஜிவ் நேரடியாக இதில் தலையிட்டிருக்க வேண்டாம் என்பதுதான் கருத்தாக இருந்தது.

இவ்வாறு நட்வர்சிங் தமது புத்தகத்தில் கூறியுள்ளார்.

English summary
Sri Lankan president J.R. Jayewardene asked Indian prime minister Rajiv Gandhi in 1986 to hand over Tamil Tigers chief Velupillai Prabhakaran to him so that he could hang him in Jaffna.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X