For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமேதி அரண்மனைக் கலவரம்... யார் இந்த அமீதா?

Google Oneindia Tamil News

லக்னோ: உ.பி. மாநிலம் அமேதியில் உள்ள பூபதி பவன் அரண்மனையில் இன்று நடந்த கலவரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மோதல் வெடிக்கக் காரணமானவர் அமீதா. இவர் காங்கிரஸ் எம்.பியும், ராஜ குடும்பத்து வாரிசுமான சஞ்சய்சிங்கின் 2வது மனைவி ஆவார்.

இவருக்கு எதிராக சஞ்சய் சிங்கின் முதல் மனைவிக்குப் பிறந்த 3 மகன்களும், அவர்களது ஆதரவாளர்களும் போர்க்கொடி உயர்த்தியதால்தான் பிரச்சினை வெடித்து விட்டது.

யார் இந்த அமீதா...

யார் இந்த அமீதா...

சஞ்சய் சிங்கின் 2வது மனைவி அமீதாவின் கதை உலகம் அறிந்தது. அவர் மறைந்த, இந்தியாவின் புகழ் பெற்ற பேட்மிண்டன் வீரர் சையத் மோடியின் மனைவி ஆவார்.

கள்ளக்காதல்

கள்ளக்காதல்

அமீதாவும், சஞ்சய் சிங்கும் பல வருடங்களுக்கு முன்பு கள்ளக்காதலர்கள் ஆவர். அப்போது சஞ்சய் சிங்குக்கு மனைவி இருந்தார். ஆனால் அதைத் தாண்டி அவர் மோடியின் மனைவியான அமீதா மீது கள்ளக்காதல் கொண்டார். இந்தக் காதல் தொடர்பாக மோடி, அமீதா, சிங் ஆகியோருக்கு இடையே பூசல் வெடித்தது.

கூலிப்படை மூலம் கொல்லப்பட்ட மோடி

கூலிப்படை மூலம் கொல்லப்பட்ட மோடி

இந்த நிலையில் 1988ம் ஆண்டு லக்னோவில் உள்ள கே.டி. சிங் பாபு ஸ்டேடியத்தில் பயிற்சியை முடித்து விட்டு வெளியே வந்தபோது 2 பேரால் சுட்டுக் கொல்லப்பட்டார் மோடி. நாட்டையே உலுக்கிய கொலைச் சம்பவம் இது.

சஞ்சய் சிங் - அமீதா கூட்டுச் சதி

சஞ்சய் சிங் - அமீதா கூட்டுச் சதி

இந்த கொலை வழக்கில் சஞ்சய் சிங், அமீதா உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் கூலிப்படையை ஏவி சையத் மோடியைக் கொலை செய்ததாக சஞ்சய் சிங், அமீதா மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் பின்னர் இந்த வழக்கிலிருந்து இருவரும் எப்படியோ வந்து விட்டனர். அதன் பின்னர் இருவரும் பகிரங்கமாக திருமணமும் செய்து கொண்டனர்.

அன்று முதலே சர்ச்சை

அன்று முதலே சர்ச்சை

அன்று முதலே சஞ்சய் சிங்கின் குடும்பத்தில் பூசல்தான். முதல் மனைவி, அவரது மூன்று மகன்கள் மற்றும் சஞ்சய் சிங் இடையே இருந்து வந்த மோதல் இன்று வெளிப்படையாக வந்து ஒருவரது உயிரிழப்புக்கம் காரணமாகியுள்ளது. குறிப்பிடத்தக்கது.

English summary
Ameeta Singh, 2nd wife of Congress MP Sanjay Singh was the former wife of late badminton champion Syed Modi. Modi was murdered by a gang, which was allegedly hired ny Ameeta and Sanjay Singh in 1988.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X