For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரயில் கட்டணம் உயருகிறது: மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தகவல்

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: ரயில் கட்டணம் உயர்த்தப்படுமா என்பது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா விளக்கம் தெரிவித்துள்ளார்.

இது குறுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

விரைவு ரயில்கள் மற்றும் புல்லட் ரயில்களை அறிமுகப்படுத்தப் போவதாக பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே அறிவித்துள்ளார். ரயில் கட்டணம் உயர்த்தப்படும் என்று முன்னாள் ரயில்வே அமைச்சரான மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துவிட்டு அதை செயல்படுத்தாமல் இருந்துவிட்டார்.

ரயில்வே துறையில் 13.2 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். இந்த துறை பற்றி தெரிந்துகொள்ளவே எனக்கு குறைந்தது ஒரு மாத காலம் ஆகும். ரயில்வே துறையில் பாதுகாப்பு, சேவை, வேகம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பேன்.

மோடியுடன் சேர்ந்து பணிபுரிவதற்கு நான் அதிர்ஷ்டசாலி ஆவேன். நாட்டில் மாற்றம் ஏற்பட பாஜக தொண்டர்களும், ஆர்.எஸ்.எஸ். ஆட்களும் உதவியுள்ளனர் என்றார்.

இதன் மூலம் ரயில் கட்டணம் உயர்த்தப்படலாம் ஆனால் தற்போதைக்கு இல்லை என்பது தெரிகிறது.

English summary
Railway Minister DV Sadananda Gowda said he intended to bring major changes in the railway sector and he would focus on the 'four S'- safety, service, security and speed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X