For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ 3.5 கோடி பரிசுத் தொகையுடன் உலக கபடி லீக் போட்டிகள்- 8 அணிகள் பங்கேற்பு!

Google Oneindia Tamil News

World Kabaddi League announces team franchise names and logos
டெல்லி: உலகின் முதல் தொழில்முறையிலான உலக கபடி லீக் போட்டிக்கான அறிவிப்பானது நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் பாணியில் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டியில் கலந்து கொள்ளும் அணிகளின் உரிமையாளர்கள் பற்றிய அறிவிப்பையும், அணிகளுக்கான சின்னங்களையும் பஞ்சாப் முதல்வர் சுக்பீர் சிங் பாதல் வெளியிட்டார்.

இப்போட்டித் தொடர் ஆகஸ்டு 9 ஆம் தேதி அன்று துவங்க உள்ளது.

போட்டியில் 8 அணிகள்:

இப்போட்டியில் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. இவ்வணிகளில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், சோனாக்‌ஷி சின்கா, யோ யோ ஹனி சிங் ஆகியோருக்கு உரிமையான அணிகளும் அடக்கம்.

அக்‌ஷய் - ஹனி சிங் அணிகள்:

அக்‌ஷய் குமாரின் அணியானது "ஸ்பீடி சிங்ஸ்" மற்றும் ஹனியின் அணியானது "யோ யோ டைகர்ஸ்" என்றும் அழைக்கப்படுகின்றன.

மற்ற அணிகளின் உரிமை:

மற்றொரு அணியான வான்கூவர் லயன், குஜ்ரித் சிங் புயுர்வால் உடையது. ஹரியானா போகஸ் ஆர் அண்ட் ஏஏஆர் கம்யூனிகேஷனுடையது. பஞ்சாப் தண்டர் பாலிவுட் நடிகர் ரஜத் பேடியுடையது.

திறமைகள் ஆயிரம்:

"இந்திய மக்களின் பார்வையில் விளையாட்டு என்றால் ஒன்றே ஒன்றுதான் தெரியும் என்று நீங்கள் கூறினாலும், அதையும் தாண்டி நம்முடைய திறமைகளை நீருபிக்க மேலும் பல்வேறு விளையாட்டுகள் உள்ளன" என்று கூறியுள்ளார் ஒரு கபடி வீரர்.

பெண்களுக்கும் உண்டு:

"இந்த கபடிப் போட்டியின் வெற்றியினைத் தொடர்ந்து பெண்களுக்கான சர்வதே கபடிப் போட்டியை ஏற்பாடு செய்யும் எண்ணமும் உள்ளது" என்று கூறியுள்ளார் பாதல்.

4 மாதகால போட்டி:

இந்த போட்டியானது 86 பிரிவுகளாக, 13 சர்வதேச நகரங்களில், 4 மாதங்களுக்கு நடைபெற உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இக்கபடிப் போட்டிக்கான பரிசுத் தொகையாக ரூபாய் 3.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சோனி சிக்ஸ்

இந்த போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையானது இந்தியாவில் சோனி சிக்ஸ் சேனலுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
World Kabaddi League (WKL), the first professional Kabaddi League of the world, on Thursday announced the franchisees names and logos of its teams in presence of Deputy Chief Minister of Punjab Sukhbir Badal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X