For Daily Alerts
Just In
சாலை விபத்தில் காயமடைந்த ஒய்.எஸ்.ஆர். காங். வேட்பாளர் ஷோபா நாகி ரெட்டி பலி
ஹைதராபாத்: சீமாந்திராவில் சாலை விபத்தில் சிக்கிய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஷோபா நாகி ரெட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸைச் சேர்ந்தவர் எம்.எல்.ஏ. ஷோபா நாகி ரெட்டி. இவர் தற்போது சீமாந்திராவின் அல்லகட்டா சட்டசபை தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தார்.
அவர் நேற்று இரவு தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது சாலை விபத்தில் சிக்கினார். இதில் படுகாயமடைந்த நிலையில் ஹைதராபாத் மருத்துவமனையில் ஷோபா அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று பகல் அவர் உயிரிழந்தார். ஷோபா நாகி ரெட்டியின் இழப்பு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது.
Comments
lok sabha election 2014 andhra ysr congress die லோக்சபா தேர்தல் 2014 ஆந்திரா ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு
English summary
YSR Congress MLA Shobha Nagi Reddy, injured in traffic accident while returning from campaigning, passes away