For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அப்துல்காதர் மரணதண்டனை எதிரொலி: வங்காளதேசக் கலவரத்தில் 21 பேர் பலி

Google Oneindia Tamil News

21 killed in Bangladesh violence after Jamaat leader's hanging
டாக்கா: வங்காள தேசத்தில் எதிர்க்கட்சித் தலைவரான அப்துல்காதர் தூக்கிலிடப் பட்டதைக் கண்டித்து வெடித்த கலவரத்தில் சிக்கி 21 பேர் பலியாகியுள்ளனர்.

வங்காள தேசத்தின் ஐமாத் இ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் 75 வயது அப்துல்காதர் மொல்லா. இவர் மீது, கடந்த 1971-ம் ஆண்டு நடந்த வங்காள தேச விடுதலைப் போரில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப் பட்டது. அதனைத் தொடர்ந்து மொல்லாவுக்கு சுப்ரீம் கோர்ட் மரண தண்டனை விதித்தது.

தீர்ப்பை மறு ஆய்வு செய்க்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, சுப்ரீம் கோர்ட்டால் தள்ளுபடி செய்யப் பட்டது. அதனைத் தொடர்ந்து, போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக ஐமாத் இ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் அப்துல்காதர் மொல்லா உள்பட 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

அப்துல்காதர் மொல்லா தூக்கிலிடப் படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வங்காள தேசத்தில் உள்ள லஸ் மிர்பூரில் கலவரம் வெடித்தது. அதில், மொல்லாவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றக் கூடாது என வலியுறுத்தி ஜமாத் இ-இஸ்லாமி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

ஆனபோதும், தீர்ப்பின் படி, நேற்று முந்தினம் அப்துல் காதர் மொல்லா தூக்கிலிடப்பட்டார். 350 பொது மக்களை கொன்றதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து போராட்டம் கலவரமாக மாறியது. கலவரத்தை அடக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். கடந்த 3 நாட்களாக வங்காள தேசம் முழுவதும் பரவி வரும் கலவரத்துக்கு நேற்று நள்ளிரவு வரை 21 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக்கலவரத்தின் பின்னணியில் அந்நாட்டு எதிர்கட்சி தலைவர் கலிதா ஜியா உள்ளதாக பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம்சாட்டியுள்ளார். மேலும், 'அப்பாவி மக்களை கொன்று அராஜகத்தில் ஈடுபடும் செயலை எதிர்கட்சியினர் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், உங்களை எப்படி கட்டுப்படுத்துவது என்று அரசுக்கு தெரியும்' என அவர் எச்சரித்துள்ளார்.

English summary
The death toll in violence across Bangladesh triggered by the execution of a top Jamaat-e-Islami leader on Sunday rose to 21, prompting Prime Minister Sheikh Hasina to issue a stern warning saying, "We know how to control you."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X