For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனாட்டு தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... சுனாமி அபாயம் இல்லை

Google Oneindia Tamil News

Vanuatu Location
வாஷிங்டன்: நியூசிலாந்துக்கு வடக்கே தெற்கு பசிபிக் தீவான வனாட்டுவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இருப்பினும் சுனாமி அபாய எச்சரிக்கை எதையும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் விடுக்கவில்லை.

இந்த நிலநடுக்கத்தின் அளவு 6.6 ரிக்டராக இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம், உயிரிழப்பு குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை. இந்த நிலநடுக்கத்தின் மையம் சோலா என்ற கிராமத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வனாட்டுவின் தலைநகர் போர்ட் விலாவிலிருந்து 443 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

வனாட்டு தீவு, பசிபிக் தீவளையப் பிராந்தியத்தில் இடம் பெற்றுள்ளது. இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது இயல்பு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த இந்த தீவில் நிறைய எரிமலைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The South Pacific island nation of Vanuatu has been hit by a 6.6-magnitude earthquake, according to t he US There were no immediate reports of damage or injuries and the Pacific Tsunami Warning Centre said no tsunami warning was in effect. The USGS report said the quake epicentre was 23 miles (37km) west of the village of Sola and 275 miles (443km) north of the capital, Port Vila, at a depth of 122 miles ( 196km).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X