For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாலிபன்களின் மிரட்டல்களுக்கு இடையில் தொடங்கிய ஆப்கன் தேர்தல்

Google Oneindia Tamil News

டெல்லி: தலிபான்களின் மிரட்டல்களுக்கிடையே ஆப்கானிஸ்தானின் அதிபர் தேர்தல் துவங்கி உள்ளது.

ஆப்கானிஸ்தான் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் சற்று முன் வாக்கு பதிவு தொடங்கியுள்ளது.

தலிபான் தீவிரவாதிகளின் தொடர் தாக்குதல்களுக்கிடையே ஆப்கானிஸ்தான் அரசு இன்று அதிபர் தேர்தலை எதிர்கொள்கின்றது.

மாற்றம் ஏற்படுத்தும் தேர்தல்:

மாற்றம் ஏற்படுத்தும் தேர்தல்:

இதன் விளைவு எதுவாக இருக்கும்போதிலும் அமைதியான முறையில் ஒரு அரசிடமிருந்து மற்றொரு அரசுக்கு மாற்றம் நடைபெறுவது என்பதே இங்கு ஏற்பட்டுள்ள பெரிய முன்னேற்றம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

அரசியல் சாசன முடிவு:

அரசியல் சாசன முடிவு:

அதிபர் ஹமீத் கத்சாயின் பதவிக்காலம் முடிவடைவதை முன்னிட்டு அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. தொடர்ந்து 12 ஆண்டுகளாக பதவி பதவி வகித்து வரும் அதிபர் ஹமீத் கத்சாய் ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசியல் சாசனப்படி மீண்டும் போட்டியிட முடியாது.

தனிப் பெரும்பான்மை அமையுமா? :

தனிப் பெரும்பான்மை அமையுமா? :

இதனால், இன்றைய அதிபர் தேர்வின் முன்னணியில் முன்னாள் வடக்கு கூட்டணித் தலைவரும், ஹமீத் கர்சாய் அரசின் வெளியுறவு அமைச்சருமான அப்துல்லா இருப்பதாகக் கருதப்படுகின்றது. இருப்பினும் தனி பெரும்பான்மையுடன் அரசு அமைக்கத் தேவையான 51 சதவிகித வாக்குகளை அவர் பெறுவாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பாதுகாப்பு ஒப்பந்த அனுமதி:

பாதுகாப்பு ஒப்பந்த அனுமதி:

அவ்வாறு இருக்கும் நிலையில் பஷ்டுன் பிரிவினரின் வாக்குகளைப் பெறும் அஷ்ரப் கனி அல்லது சல்மை ரசூல் இரண்டாவது இடத்தைப் பெறக்கூடும். இவர்களில் கனி வெற்றி பெற்றால் கர்சாய் கையெழுத்திட மறுத்த அமெரிக்காவின் இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு அனுமதி கிடைக்கும் என்பது மேற்கத்திய நாடுகளின் கணிப்பாக இருக்கின்றது.

நிலையான உறவு:

நிலையான உறவு:

இவர்களில் யார் ஆட்சி அமைத்தாலும் இந்தியா தன்னுடைய நிலையான உறவைத் தொடரமுடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது. உணவு, எரிபொருள் மற்றும் ஆயுத திறனை உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு வழங்கமுடியும் என்றால் அவர்களால் தலிபான்களை எதிர்க்கவும் பின்னர் ஒரு கட்டத்தில் அவர்களுடனான சமாதான உடன்பாட்டை எட்டவும் முடியும் என்று ஆப்கானிஸ்தானின் முன்னாள் இந்தியத் தூதர் ஜெயந்த் பிரசாத் தெரிவிக்கின்றார்.

தளவாட உதவிகள்:

தளவாட உதவிகள்:

ஆப்கானிய அரசுக்கான ராணுவ தளவாட உதவிகளும் ராணுவ, காவல் மற்றும் சிறப்புப் படையினருக்கான பயிற்சி முறைகளும் இந்திய அரசால் விரிவுபடுத்தப்பட வேண்டும். இது இல்லாமல் உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதார உதவிகள் மட்டும் வழங்கப்படுவது என்பது இந்திய நலன்களைப் பாதுகாப்பதற்கான மூலோபாய முயற்சிகளுக்கோ, முதலீடுகளுக்கோ ஏற்படும் பின்னடைவாகவே இருக்கும் என்பது அனந்தா, அஸ்பன் மையம் டெல்லி பாலிசி குரூப் என்ற இரண்டு சிந்தனை மையங்கள் வெளியிட்டுள்ள ஆய்வுக் கணிப்பாகும்.

பெண் பத்திரிக்கையாளர் கொலை:

பெண் பத்திரிக்கையாளர் கொலை:

இந்நிலையில் நேற்று பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் தேர்தல் நெருக்கடியில் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.ஆப்கானிஸ்தானின் கிழக்கப் பகுதியில் போலீஸ் உடையில் வந்த தீவிரவாதி ஒருவன் வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.

தீவிர கண்காணிப்பு:

தீவிர கண்காணிப்பு:

மேலும், அதிபர் தேர்தலை தாலிபர்கள் சீர்குலைக்கலாம் நாடு முழுவதும் ராணுவம் மற்றும் பேலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் .மாலை 4 மணி வரை வாக்கு பதிவு நடைபெறும் நிலையில், வாக்காளர்கள் வசதிக்காக 28,500 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன

English summary
Election held in Afghanistan today. Taliban terrorist gave threat for the candidates in this election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X