For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருத்து வாக்கெடுப்பில் தோல்வி: ஸ்காட்லாந்து பிரதமர் ராஜினாமா!

By Mathi
Google Oneindia Tamil News

லண்டன்: பிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்து பிரிவது தொடர்பான வாக்கெடுப்பில் பிரிய வேண்டாம் என்று பெரும்பான்மையோர் வாக்களித்ததால் ஸ்காட்லாந்து பிரதமர் தமது பதவியை ராஜினமா செய்துள்ளார்.

பிரிட்டனுடன் ஸ்காட்லாந்து இணைந்து இருக்கத் தேவையில்லை, நாம் தனி நாடாக பிரிந்து செல்வோம் என்ற கோரிக்கையை வைத்து தீவிரமாக பிரசாரம் செய்து வந்தவர் ஸ்காட்டிஷ் தேசிய கட்சியின் தலைவரான அலெக்ஸ் சல்மாண்ட். இவர் ஸ்காட்லாந்து பிரதமராகவும் பதவி வகித்து வந்தார்.

Alex Salmond resigns as first minister after Scotland rejects independence

இந்த நிலையில் நேற்று முன்தினம், பிரிட்டனுடன் இருந்து பிரிந்து செல்வதா? வேண்டாமா? என்பது குறித்த கருத்து வாக்கெடுப்பு ஸ்காட்லாந்து மக்களிடம் எடுக்கப்பட்டது. இதில் 55.3 சதவீத மக்கள் பிரிட்டனுடன் இணைந்திருக்க ஆதரவு தெரிவித்தனர். அலெக்ஸ் சல்மாண்ட் முயற்சி தோல்வியடைந்தது. இதையடுத்து ஸ்காட்லாந்து பிரதமர் மற்றும் கட்சியின் தலைவர் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்வதாக அலெக்ஸ் சல்மாண்ட் நேற்று அறிவித்தார்.

ஸ்காட்லாந்தின் அடுத்த பிரதமரும், கட்சியின் புதிய தலைவரும் வருகிற நவம்பர் மாதம் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

English summary
Alex Salmond declared he will stand down as Scotland's first minister and the leader of the Scottish National party after failing to secure a majority for independence, as the country's vote to remain in the United Kingdom foreshadowed months of constitutional turmoil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X