For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அப்பா.. இன்று நான் இறந்துவிடுவேனா.? நாள்தோறும் கேட்கும் காஸா பச்சிளங்குழந்தைகளின் துயரக் கேள்வி

By Mathi
Google Oneindia Tamil News

காஸாமுனை: போர் பெருந்துயரமானது.. அதுவும் பச்சிளங்குழந்தைகளையும் அப்பாவி பொதுமக்களையும் ரணகளப்படுத்தி பலியெடுக்கும் போர் எத்தனை கொடூரமானது என்பதை காஸா பிஞ்சுகள் உலகுக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் வகைதொகையின்றி வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் பலியானோர் எண்ணிக்கை 700 ஆகிவிட்டது. படுகாயமடைந்தோர் எண்ணிக்கையோ 5 ஆயிரம்.

'Am I Going to Die, Daddy?' The Child in Gaza Asked

பலி எடுக்கப்பட்ட பாலகர்கள்:

  • இஸ்ரேலின் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீன பச்சிளம் குழந்தைகள் பலியாகிவிட்டன.
  • பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் உடலெங்கும் குண்டு காயங்களோடு, துப்பாக்கி சன்னங்கள் துளைத்த முகங்களோடு கதற வைக்கும் கோலங்களில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • ஒவ்வொரு காஸா குழந்தையும் "அப்பா இன்று நானும் இறந்துவிடுவேனா" என்ற கேள்வியை கேட்பது வழக்கமாகிவிட்டது.
  • இஸ்ரேல் நிகழ்த்தும் யுத்தமே, காஸா குழந்தைகள் மீதுதானோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில், கடற்கரையில் விளையாடிய சிறுவர்களை பலியெடுத்துள்ளது இஸ்ரேல்.
  • கடந்த சில நாட்களில் மட்டும் ஒவ்வொரு மணி நேரமும் ஒரு குழந்தை பலியாவதாக ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது.
  • உலகை உலுக்கும் வகையில் காஸாவில் பாலஸ்தீன குழந்தைகள் பேரவலத்தை எதிர்கொண்டிருப்பதாகவே பெரும்பாலான ஊடகங்கள் பதிவும் செய்து வருகின்றன.
  • போர்முனையிலும் கூட பாலஸ்தீன குழந்தைகள், எங்கள் அம்மாக்களையும் குழந்தைகளையும் தொலைத்துவிட்டோமே என்று கண்டன குரல் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கின்றனர்.
English summary
Israeli troops battled Hamas militants on Wednesday near a southern Gaza Strip town as the U.S. secretary of state flew into Israel to press top-gear efforts for a truce in the conflict that has so far killed at least 657 Palestinians and 31 Israelis. "One child has been killed in Gaza every hour for the past two days," said a statement released Wednesday by the U.N. Office for the Coordination of Humanitarian Affairs (OCHA).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X