For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உங்களை நீங்களே போட்டோ எடுத்துக்கறீங்களா.. அப்ப சைக்யாட்ரிஸ்ட்டை போய்ப் பாருங்க!

Google Oneindia Tamil News

சிகாகோ: நமக்கு நாமே.. இது கருணாநிதி கொண்டு வந்த நல்ல திட்டம்.. ஆனால் நமக்கு நாமே போட்டோ எடுத்துக் கொண்டால் அது மன நல பாதிப்பாம்.. அமெரிக்க மன நல சங்கம் இப்படிக் கூறியுள்ளது.

இப்பெல்லாம் யாரைப் பார்த்தாலும், எங்கு பார்த்தாலும் இந்த செல்ஃபி எனப்படும் தங்களைத் தாங்களே செல்போனில் போட்டோ எடுத்துக் கொள்வதில் ஒரு பெரும் ஆர்வமே காட்டுகிறார்கள்.

ஆனால் இது மன நல பாதிப்பின் அடையாளம் என்று கூறி பீதியைக் கிளப்புகிறது அமெரிக்க மன நல சங்கம்.

சிகோகா கூட்டத்தில்

சிகோகா கூட்டத்தில்

சிகாகோவில் நடந்த அமெரிக்க மன நல சங்கத்தின் வருடாந்திர இயக்குநர்கள் கூட்டத்தின்போது இதுதொடர்பாக ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர்.

செல்பிட்டிஸ்

செல்பிட்டிஸ்

இப்படி தங்களைத் தாங்களே போட்டோ எடுத்துக் கொள்ளும் பிரச்சினைக்குப் பெயர் செல்பிட்டிஸ் (selfitis),என்பதாகும் என்று இந்த அமைப்பு கூறியுள்ளது.

சுய நம்பிக்கை இல்லாதவர்களாம்

சுய நம்பிக்கை இல்லாதவர்களாம்

இப்படி தங்களைத் தாங்களே போட்டோ எடுத்து பேஸ்புக், டிவிட்டரில் போடும் பழக்கம் உள்ளவர்களுக்கு சுய நம்பிக்கை குறைவாக இருக்குமாம். மேலும் மற்றவர்களுடன் இணைந்து பழகும் தன்மை இவர்களிடம் குறைவாக இருக்குமாம்.

3 வகையான மன நல பாதிப்பு

3 வகையான மன நல பாதிப்பு

மொத்தம் 3 வகையான செல்பி மன நலப் பாதிப்பு ஏற்படுவதாகவும் இந்த அமைப்பு சொல்கிறது.

லைட்டா இருந்தா.. இப்படி இருக்கும்

லைட்டா இருந்தா.. இப்படி இருக்கும்

நீங்கள் ஒரு நாளைக்கு 3 முறை சுயமாக படம் எடுக்கிறீர்கள் என்றால் பிரச்சினை இப்போதுதான் வந்திருக்கிறது என்று அர்த்தமாம்.

சற்று சீரியஸ்...

சற்று சீரியஸ்...

ஒரு நாளைக்கு குறைந்து 3 படங்களை எடுப்பதோடு அதை அடிக்கடி சோஷியல் மீடியாவில் போட்டு வந்தால் உங்களுக்கு லேசாக முற்ற ஆரம்பித்துள்ளது என்று அர்த்தமாம்.

ரொம்பக் கஷ்டம்...

ரொம்பக் கஷ்டம்...

அடிக்கடி இப்படி போட்டோ எடுத்தபடி இருந்தால், அதை ஷேர் செய்தபடி இருந்தால் உங்களுக்கு முற்றி விட்டது என்று அர்த்தமாம்.

இதுக்கெல்லாம் மருந்து கிடையாதாம்

இதுக்கெல்லாம் மருந்து கிடையாதாம்

இப்போதைக்கு இந்தப் பிரச்சினைக்கு சிகிச்சை என்றெல்லாம் எதுவும் இல்லையாம். சாதாரண நடத்தை தெரப்பி மட்டும்தான் இருக்கிறதாம்.

ஒபாமாகேர் இருக்காம்ய்ய்யா

ஒபாமாகேர் இருக்காம்ய்ய்யா

ஆனால் இந்த தெரப்பியை அமெரிக்காவின் ஒபாமா கேர் திட்டத்தில் சேர்த்துள்ளனராம். எனவே குறைந்த காசில் இந்த தெரப்பியை எடுத்துக் கொண்டு சரி செய்து விடலாமாம்.

அப்பன்னா ஒபாமாதான் முதல்ல தெரப்பிக்குப் போகனும்...

English summary
The American Psychiatric Association (APA) has officially confirmed what many people thought all along: taking ‘selfies’ is a mental disorder. The APA made this classification during its annual board of directors meeting in Chicago. The disorder is called selfitis, and is defined as the obsessive compulsive desire to take photos of one’s self and post them on social media as a way to make up for the lack of self-esteem and to fill a gap in intimacy. APA said there are three levels of the disorder.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X