For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொசுக் கடி தாங்கலியா.. கையில் செல்போனை வச்சிகிட்டு இனிமே அப்படி சொல்லாதீங்க

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஸ்மார்ட்போனின் மூலமாக கொசுவையும் விரட்ட வழி பிறந்துவிட்டது முடியும். அதற்கான புதிய அப்ளிகேஷனை அமெரிக்க நிறுவனம் ஒன்று தயாரித்து அறிமுகம் செய்துள்ளது.

உலகம் மொத்தமும் ஸ்மார்ட் போனுக்குள் அடங்கிவிட்டது என்று சொன்னால் அது மிகையில்லை. அந்த அளவுக்கு அனைத்து வசதிகளும் செல்போனில் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளன. தற்போது இது இன்னும் ஒருபடி மேலே சென்று கொசுவை விரட்டக் கூட அப்ளிகேஷன் வந்துவிட்டது.

கொசுவத்தியால் மாசு

கொசுவத்தியால் மாசு

தற்போது விற்பனையாகி வரும் பல்வேறு கொசு விரட்டிகளாலும் கொசுக் களை கட்டுப்படுத்த முடிவதில்லை என்று சிலர் புலம்புகிறார்கள். மேலும் அதில் இருந்து கிளம்பும் புகை சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது. இந்த புகை சிலருக்கு ஒவ்வாமையையும் ஏற்படுத்துகிறது.

கொசுவை விரட்டும் அப்ளிகேஷன்

கொசுவை விரட்டும் அப்ளிகேஷன்

தற்போது அந்த பிரச்சினைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ள "Mosquito Repellent" என்ற அப்ளிகேஷனை ஸ்மார்ட்போனில் டவுன்லோடு செய்து அதனை இயக்கினால், அதில் இருந்து வெளியாகும் உயர் அதிர்வெண் கொண்ட சப்த அலைகள் கொசுக்களை ஓட ஓட விரட்டி விடும்.

தொல்லையில்லா சத்தம்

தொல்லையில்லா சத்தம்

கொசுக்களுக்கு பிடிக்காத இந்த அல்ட்ரா சவுண்டால் கொசுக்கள் நமக்கு அருகில் கூட வராது. அதே போல் எம் டிராக்கர் என்ற அப்ளிகேஷன் மூலமாக பல்வேறு பூச்சி தொல்லைகளில் இருந்தும் விடுபடலாம். கொசு விரட்டி வெளியிடும் சத்தம் நமக்கு இம்சையாக காதில் ஒலிக்காது. காதின் அருகே செல்போனை வைத்து கேட்டால் மட்டுமே ஒலி கேட்கும்.

இலவச அப்ளிகேஷன்

இலவச அப்ளிகேஷன்

கொசுக்களுக்கு காதுகள் இல்லை என்ற போதிலும், ஒலி அதிர்வை கொசுக்களால் கண்டுபிடிக்க முடியும். ரயில் நிலையம், பஸ் நிலையம் போன்ற பொது இடங்களிலும், வெளியிடங்களிலும் கொசு தொல்லை அதிகமாக இருந்தால், செல்போனை எடுங்கள், அப்ளிகேசன் சுவிட்சை ஆன் செய்யுங்கள். இது உண்மையிலேயே வேலை செய்கிறதா இல்லையா என்பதை பார்ப்பது பெரிய கஷ்டமில்லை. ஏனெனில் இதை இலவசமாக டவுன்லோடு செய்துகொள்ள முடியும்.

English summary
Tired of using mosquito repellents that appear ineffective nowadays? A new smartphone app can rescue you from that imminent bite. Called "Mosquito Repellent", it will repel mosquitoes by emitting high frequency sounds that mosquitoes hate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X