For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீவிரவாதத்தை எதிர்த்து சர்வதேச சமூகம் ஒன்றுபடும்: ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன்

By Siva
Google Oneindia Tamil News

நியூயார்க்: தீவிரவாதத்திற்கு எதிராக சர்வதேச சமுதாயம் ஒன்றுபட்டு நிற்கும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

Ban Ki-moon: International Community Will Stand Together Against Terrorism

ஈராக் மற்றும் சிரியாவில் தீவிரவாதத்தால் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதை எதிர்த்து சர்வதேச சமூகம் ஒன்றுபட்டு நிற்கும். அங்கு உள்நாட்டு பிரச்சனை மற்றும் அரசின் தோல்வியால் தீவிரவாத அமைப்புகள் சக்திவாய்ந்தவையாகிவிட்டன.

ஹைஜீரியாவில் போக்கோ ஹாரம் தீவிரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈராக் மற்றும் சிரியாவில் தீவிரவாத அமைப்புகள் தாக்குதல்கள் மட்டும் நடத்தவில்லை மாறாக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை பறிமுதல் செய்து வருகின்றன.

மாலி, தெற்கு சூடான் மற்றும் மத்திய ஆப்பிரிக்க குடியரசில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதை மறந்துவிட முடியாது. இது குறித்து மேலும் என்ன செய்யலாம் என்பது பற்றி அடுத்த வாரம் நடக்கும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 69வது உச்சி மாநாடு நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் வரும் 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
UN secretary general Ban Ki-moon told that international community will stand together against terrorism.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X